Dr M Tamilselvi - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Dr M Tamilselvi |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 29-Sep-2020 |
பார்த்தவர்கள் | : 221 |
புள்ளி | : 15 |
காளைகள்
காலையிளஞ் சூரியனும் கலைநுகர் மக்களுமே!
வழக்கமான வாடிவாசல் வந்திருந்து பார்வையிட
குன்றுபோல சிமிழ்சிலுப்பும் காளையிரண்டு
கட்டிப்புரளுது; உருளுது, காண வாரீர்!
தாய்மொழி
தொட்டிலில் பிறந்த மொழி
தொன்மைமிகு தமிழ் மொழி
காற்றில் மிதந்த மொழி
காவியத்தில் உதிர்ந்த மொழி
ஏட்டில் எழுதிய மொழி
எங்கள் மொழி எளிய மொழி
சிந்தையைத் தூண்டும் மொழி
தென்பொதிகை உதித்த மொழி
எங்கள் தாய்மொழி
எங்கள் தாய்மொழி - இதுவே
எங்கள் தமிழ்மொழி!
*இயற்கை*
கண்ணுக்கு விருந்தான காட்சி நீயே
கடவுள் படைப்பில் நீயோர் அற்புத ஆயுதமே
ஐம்பூ தங்களின் அடக்கம் நீயே..!
'வழித் துணையாய் வாராய்...*
ஆத்தோரம் குளத்தோரம்
துள்ளித் திரியும் மீன்குஞ்சாய்
அக்கினி பிளக்கும் வெயிலிலும்
ஆடிப்பாடி ஆனந்தமாய்
ஆட்டம் நாமும் போட்டோமே..!
நஞ்சை புஞ்சை தரிசெல்லாம்
நனிநாடி நாமும் சென்றோமே...
குற்றால மலைக் குரங்காட்டம்
கொம்புகள் தோறும் மேலேறி
குதித்து ஆட்டம் போட்டோமே...!
சட்டைப் பையில் புளியங்காய்
சப்பிச் சாப்பிட உப்பு காரம்
பொட்டலம் போட்டே எடுத்துச் செல்வோம்.
போகும் தூரம் வெகு தூரம் - எனில்
சிட்டாய் பறந்தே செல்வோமே...!
ஒரு நாள்- ஒரு கணம்-
அம்மா தடுத்தும் கேளாமல்..
அத்தை சொல்லும் மதியாமல்..
என்றும் இல்லா எக்காலத்துடன்
ஏரிக் கரைக்குச் சென்ற
வேடிக்கை மனிதரைப் போல்!
கவிஞர் இரா. இரவி
வேடிக்கை மனிதரைப் போல் வீழவில்லை பாரதி
வையகம் போற்றிடும் மகாகவி ஆனார் பாரதி!
வாழ்ந்த காலத்தில் மதித்தவர் மிகச்சிலர்
வாழ்ந்து முடித்த காலத்தில் மதிப்போர் பலர்!
முப்பத்தி ஒன்பது ஆண்டுகள் தான் வாழ்ந்தார்
மூவாயிரம் ஆண்டுகள் கடந்தும் வாழ்வார்!
காலத்தால் அழியாத கவிதைகள் யாத்தார்
காலம் கடந்து கவிதைகளால் வாழ்வார்!
சகலகலா வல்லவராகத் திகழ்ந்தவர் பாரதியார்
சற்றும் சளைக்காமல் எழுதிக் குவித்தார் பாரதியார்!
விடுதலை வேட்கையை பாட்டால் விதைத்தவர்
விவேகமாக சிந்தித்து பாடல்கள் செய்தவர்!
முண்டாசு கட்டி முத்தமிழ் முழங்கியவர் பாரதியார்
முறுக்கு
கரும்பலகை
என் நிறமோ கருமை….
என்னில் கற்பிப்போருக்கும்
என்னால் கற்றோருக்குமோ பெருமை!
என்னில் கிறுக்குவதனால்
எனக்கேது சிறுமை!!
என் நிறத்தால் எனக்கிங்கு
எப்போதுமே சிறப்பு!
என் மேல் விழும்
உன் கைவண்ணத்தால்
உன் வாழ்க்கைக்கோ மதிப்பு!!
முனைவர் மா.தமிழ்ச்செல்வி
விருதுநகர்
வாக்காளர்
கைநீட்டி வாங்கிய
காகித மழைக்காய்....
புற்றீசலாய் புறப்படும்
ஒருவிரல் புரட்சியாளர்கள்!
இழப்பு
ஈசலுக்கு
ஒரு நாள் ...!
பின்னவனுக்கு
ஐந்து ஆண்டுகள்...!
வட்ட முகத்தழகி
வாகாக சிரிக்கையிலே...
உச்சி வகிடெ டுத்த
உன் முகத்தப் பார்க்கையிலே...
கண்ணாலே பேசுறியே!
காத்திருக்க வைக்கிறியே!
கட்டழகி உன்னழகில்
கருத்த மச்சான் மயங்குறேனே...!
மா.தமிழ்ச்செல்வி
விருதுநகர்