கரும்பலகை

கரும்பலகை
என் நிறமோ கருமை….
என்னில் கற்பிப்போருக்கும்
என்னால் கற்றோருக்குமோ பெருமை!
என்னில் கிறுக்குவதனால்
எனக்கேது சிறுமை!!

என் நிறத்தால் எனக்கிங்கு
எப்போதுமே சிறப்பு!
என் மேல் விழும்
உன் கைவண்ணத்தால்
உன் வாழ்க்கைக்கோ மதிப்பு!!

முனைவர் மா.தமிழ்ச்செல்வி
விருதுநகர்

எழுதியவர் : முனைவர் மா.தமிழ்ச்செல்வி , (10-Oct-20, 9:32 pm)
சேர்த்தது : Dr M Tamilselvi
பார்வை : 99

மேலே