புத்தாண்டு வாழ்த்துக்கள்

புத்தாண்டு நல்வாழ்த்துகள்
🌺🌿🌺🌿🌺🌿🌺🌿🌺🌿🌺
#திசையெட்டும் கிழக்காய்..,!

எண்ணங் கனிந்திட ஏற்றம் பெருகிட
இனிதாய்ப் பிறந்தது ஆண்டு
வண்ணம் பலப்பல
வாழ்வினில் கூட்டிட
வந்து பிறந்தது ஆண்டு..!

நெஞ்சினில் வளர்ப்பீர்
நேர்க்கொண்ட ஆசைகள்
நிறைவே றுந்தான் யாவும்
நஞ்சை புஞ்சைகள்
நல்ல விளைச்சலில்
நன்மை யளித்திடும் பாரும்.!

கடந்தவை யதிலே
நல்லன பலவாம்
கவனத்தில் என்றும் வைப்பீர்
நடப்பவை இனிதான்
நம்மை உயர்த்தும்
நம்பிக்கை நெஞ்சில் விதைப்பீர்..!

மத்தளம் முழங்க
மங்கல மிசைக்க
மகிழ்வினில் ஆண்டின் துவக்கம்
புத்தனைப் போலவே
போற்றும் வகையினில்
புவியது மாந்தரை வளர்க்கும்..!

திரும்பும் திசையினில்
சுடர்விடும் சூரியன்
திசையெட்டும் கிழக்காய் காட்டும்
விரும்பிய வாழ்க்கை
வியப்புற வைத்தே
வெற்றியின் மாலைகள் சூட்டும்..!

அனைவருக்கும்
இனிய புத்தாண்டு தின வாழ்த்துக்களுடன்

#சொ.சாந்தி
🌺🌿🌺🌿🌺🌿🌺🌿🌺🌿🌺

எழுதியவர் : சொ.சாந்தி (1-Jan-25, 9:13 pm)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 5

மேலே