பொங்கல் வாழ்த்து
பொங்குக பொங்குக
மங்கள மஞ்சள் கங்கணம்
கழுத்தில் சூடிய புதுப் பானையில்
புது அறுவடை நெல்லிலிருந்து
குத்தி எடுத்த புது அரிசியில்
பசும்பால் சேர்த்து
புதுக்கரும்பு வெல்லம் நெய்
முந்திரி, ஏலம் சேர்த்த பொங்கலே
பொங்கிடுக இல்லமெல்லாம்
மங்களம் சேர்க்க இன்பம் சேர்க்க
மனத்தில் நல்ல மங்கள எண்ணங்கள்
சேர்த்திட நல்லோர் நட்பு சேர்க்க
நாட்டிலும் வீட்டிலும் ஒற்றுமை
மணம் பரப்ப ஆண்டு முழுவதும்
நாம் வாழ்ந்திட மண்ணில் வியர்வை
சிந்தி ஓடாய் உழைக்கும் உழவர்
சமுதாயம் உயர்ந்து வாழ்ந்திட
மகிழ்ந்திட, பொங்குகவே பொங்கல்
தமிழ்த் திருநாள் தைப்பொங்கல்
பொங்குகவே பொங்குகவே
தீயோர் நலிய நல்லோர் பெருகிட
வையகத்தில் மும்மாரி பெய்திட
ஒற்றுமையாம் பெருங் கலத்தில்
வாழ்க்கையும் கடலை கடந்திடுவோமே
வாழ்வு உள்ளவரை இனிமையாய்
இன்பமாய் என்றும் நம் பெண்டிர்
மானம் காத்து நாள் மக்களாய்
பொங்குக பொங்குக பொங்குகவே
புத்தாண்டு தை பொங்கலே