பொங்கலோ பொங்கல்

ஆதி இல்லாது அவனியில் மழை ஏது
மழை இல்லாது மண்ணிற்கு வளம் ஏது
வளமான மண்ணின்றி உழவில்லை
உழுது பயிர் விளைவிக்க உழவர் ஏது
மண்ணை உழுதிட மாட்டிற்கும்தான்
பணி ஏது அதனால்தான் நம் தமிழகத்தில்
சங்கம் தொட்டு தாய் மாத முதல் நாள்
தமிழ்த் திருநாளாய் ஆதியும் சூரியனுக்கு
உகந்த நன்னாளாய் பொங்கல் திருநாளாய்
உழுவோர் மட்டுமின்றி அனைத்து தமிழ்
மக்களாலும் கொண்டாடப்படும் நன்னாள்
இன்று இந்நாளில் புதுப் பானையில்
புது நெல்லரிசியில் சுவையான
கரும்பு வெல்லம் பாலும் நெய்யும் சேர்த்து
பொங்கல் ஆதிக்கு நெய்வேதியமாய்ப்
படைக்கப்பட்டு உற்றார் உறவினர் எல்லாம்
கூடி பகிர்ந்து உண்ணும் கூடும் நாள்
பொங்கல் பொங்கும் இல்லம் எல்லாம்
மங்களங்கள் வந்து நிறைந்து செல்வமாய்ப்
பொங்கும் இனிய நாள் .....
அடுத்து வரும் இரு நாளில், முதல் நாள்
உலவருடன் பணி பகிர்ந்த மாட்டுக்கு
உழவர் பெருமக்கள் நன்றி தெரிவிக்கும்
பண்டிகை நாள்.... மாட்டிற்கு நீராட வைத்து
கொம்பிற்கு சாயம் பூசி உண்ண பொங்கலும்
அளித்து ஊரெல்லாம் சுற்றி வளம் வரும் நாள்
அடுத்த நாள். .... காணும் பொங்கல்....
இந்நாளில் மக்கள் புத்தாடை அணிந்து
சிரித்த முகத்தோடு உற்றார் உறவினரை
காணும் நன்னாள் ......
இவ்வாறு மூன்று நாள் கொண்டாட்டம்
தை பொங்கல் பண்டிகைக்கே உரித்தாகும்
மண்ணிற்கும், சூரியனுக்கும் , வருணனுக்கு
முக்கியத்துவம் தந்து இயற்கையோடு ஒன்றி
உறவாடும் பொங்கல் தமிழருக்கே
தனித்துவம் தரும் ஓர் உயர்ந்த பண்டிகையும்
மனிதன் தன்னை வாழவைக்கும் ஆவிற்கும்
நன்றி சொல்லி கொண்டாடும் உயர்ந்த
நன்னாள்..... இயற்கையும் மகிழ்ந்திடும்
தைப்பொங்கல் திருநாள்

பொங்கலோ பொங்கல்.... பொங்கலோ பொங்கல்
பொங்குக மங்களம் எங்கும் அமைதிக்கு
பறை சாற்றி ஒன்று சேர்ந்து உண்டு வாழ
எல்லார்க்கும் எல்லாம் என்ற கோட்பாடோடு
வல்லவர் எளியவர்க்கு வாழ்வு தந்து
தான் வாழ்ந்து வந்தோரையும் வாழவைத்து...

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (15-Jan-20, 1:24 pm)
Tanglish : pongalo pongal
பார்வை : 72

மேலே