காற்று வாசிக்கிறதோ
காற்று வாசிக்கிறதோ?
வாசித்து கொண்டிருந்த
புத்தகம் ஒன்று
அவசரமாய் வெளியேற
வேண்டியதால்
பக்க அடையாளமாய்
மேசையில்
கவிழ்த்து வைத்த
புத்தகம்
காகிதத்தின்
இடுக்குக்குள்
நுழைந்து விட்ட
காற்று
பக்கங்களை
பரபரப்பாய்
எனக்கு முன்னால்
படித்து பார்க்க
விழைகிறதோ?
சற்று நேரத்தில்
புத்தகமே அலுத்து
களைத்து
மடங்கியே விழுந்து
கிடக்கிறது