இமைகளால் வெறுக்கப்பட்ட நேரம்
இமைகளால் வெறுக்கப்பட்ட நேரம்
இருவிழியின் கருவிழியும்
இன்னுலகம் காண இயலாது
இறைவனின் படைப்பினிலே - கண்
இழந்துவிட்ட குருடன் எனக்கு
இமைகளின் இலக்கணங்கள்
இயம்புவதும் யாதென்பேன்?
இனியவை காணென்றும் - எவர்
இடரும் காணா(மல்) மூடென்றும்
இவ்வுலக மாந்தர்கெல்லாம்
இமைகளை இறைவன் தந்திருக்க
இருந்தாலும், இல்லையென்னும் - என்
இயல்பின் நிலை யாரறிவார்?
ஒளியறியாக் கண்களென்று
ஊரும் கதைப்பேசுதடி - எம்
உள்ளத்தின் சுடர்தன்னை
உணர்ந்திட்டார் யாரிங்கே?
இமைகளால் வெறுக்கப்பட்ட
இருவிழியில் நீர்கசிய
ஈரமதுக் கரிக்குதடி - இறைவா
இன்னொரு சென்மமிருந்தால்
இந்நிலையை மாற்றி எழுதிவிடு