நிறையும்குறையும்

அளவான குடும்பம்

வளமான வாழ்வு"

அரசின் அறிவிப்பால்

குடும்பம் சிறிதானது

வாழ்க்கை தரம் உயர்வானது

பிறப்பு விகிதம் குறைந்தது

இறப்பு விகிதம் சரிந்தது

இளைஞர்கள் எண்ணிக்கை குறைந்தது

முதியோர்கள் எண்ணிக்கை உயர்ந்தது

உழைப்பவர்கள் எண்ணிக்கை குறைகிறது

உழைப்பற்றோர் எண்ணிக்கை உயர்கிறது



அரசு யோசிக்கிறது

மக்கள் தொகை கணக்கீட்டின்படி

மத்திய அரசு தரும் நிதி குறையலாம்

மக்களவையின் பிரதிநிதித்துவமும் குறையலாம்.



சாதித்தது தமிழ்நாடு என்று

மார்தட்டி மகிழ்ச்சி பெற்ற நாம்

சூழலை உணர்ந்து சிந்திப்போம்

மாற்றம் காண யோசிப்போம்

அரசின் முயற்சிக்கு தோள் கொடுப்போம்

எழுதியவர் : (6-Jan-25, 10:41 am)
சேர்த்தது : ந அலாவுதீன்
பார்வை : 40

மேலே