ந அலாவுதீன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ந அலாவுதீன் |
இடம் | : மதுரை |
பிறந்த தேதி | : 16-Apr-1961 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 12-Jun-2012 |
பார்த்தவர்கள் | : 473 |
புள்ளி | : 130 |
தமிழ் மீது பற்று கொண்டவன். கவிதை இலக்கணம் தெரியாமலேயே கவிதை வடிவில் எண்ணியதை எழுத வேண்டும் என்று நினைப்பவன். வேதியியல் பட்டம் பெற்ற தனியார் நிறுவன ஊழியன். எழுத்து தளத்தில் ஈடுபாடு கொண்டவன். பணியின் நிமித்தம் அவ்வப்போது மட்டும் எழுத்து தளத்தில் தலை காட்டுபவன்.
அளவான குடும்பம்
வளமான வாழ்வு"
அரசின் அறிவிப்பால்
குடும்பம் சிறிதானது
வாழ்க்கை தரம் உயர்வானது
பிறப்பு விகிதம் குறைந்தது
இறப்பு விகிதம் சரிந்தது
இளைஞர்கள் எண்ணிக்கை குறைந்தது
முதியோர்கள் எண்ணிக்கை உயர்ந்தது
உழைப்பவர்கள் எண்ணிக்கை குறைகிறது
உழைப்பற்றோர் எண்ணிக்கை உயர்கிறது
அரசு யோசிக்கிறது
மக்கள் தொகை கணக்கீட்டின்படி
மத்திய அரசு தரும் நிதி குறையலாம்
மக்களவையின் பிரதிநிதித்துவமும் குறையலாம்.
சாதித்தது தமிழ்நாடு என்று
மார்தட்டி மகிழ்ச்சி பெற்ற நாம்
சூழலை உணர்ந்து சிந்திப்போம்
மாற்றம் காண யோசிப்போம்
அரசின்
இதில் இணைய மாட்டேன்
மனதில் சபதம் எடுத்தாலும்
சாத்தியப்படுவதில்லை
பல சந்தர்ப்பங்களில்..
நொண்டி சாக்கும்
பொய்யான காரணங்களும்
பலரால் பரிந்துரைக்கப்படுகிறது
அன்றாட வாழ்வில்..
அன்றாட யாத்திரையில்
விரும்பாத நிகழ்வாகவும்
இறுதி யாத்திரையில்
விரும்புகின்ற நிகழ்வாகவும்
அனைவராலும் விரும்பப்படுவது
தாமதம்..
இதில் இணைய மாட்டேன்
களிப்புற்று களைப்புற்று மீண்டு, மீண்டும்
களிப்புற்று களைப்புற்றுத் தொடரும் வாழ்வில்
களைப்பற்று களிப்புறும் தியானம் அறிந்து
களைப்பற்று களிப்புறும்நாள் எந்நாளோ?
உறவென்ற நரவோடு தினமும் உழன்று
ஊர்மெச்ச வேண்டும் என்ற அவாவால்
உள்ளிருப்பதை வெளியில் காட்டாமல் மறைத்து
உத்தமனாய் காட்டி உலாவி.
நினைத்ததைப் போல் இல்லாமல் வெம்பி
வெளியில் கூறயியலாமல் அழுத்தி தெளிந்து
சோர்வாகி தலை வெடித்து தட்டுத்தடுமாறி
ஆசுவாசப் படுத்தி எழுந்து.
திறமை வளர்த்து சிறந்தவனாகி நிற்கையில்
இல்லறச் சுகத்திற்கு ஆட்பட்ட உடலால்
அடிமையாகி பெண்ணிடம் சிறைப்பட்டு சோர்ந்து
பலமிழந்து பாலகனுக்கு தந்தையாய்.
பட்ட பாடுகளால் படிப்பினை பெறாமல்
பற்பல துன்பங்களுக்கு பாதை அமைத்து
பரதேசியாய் திரிந்து பொருள் ஈட்டி
பிறப்பித்தவர்களுக்கு பிரித்து கொடுத்து.
உயிர்வாழ நினைக்கையில் உதிரம்
பெருமாளிடம் பக்தர்கள் கூட்டம்
மாலிடம் வாடிக்கையாளர் கூட்டம்
பெருமாளிடம் பக்தி சுரக்கிறது
மாலிடம் மகிழ்ச்சி பிறக்கிறது
பெருமாளிடம் கோரிக்கை வரம்
மாலிடம் கேளிக்கை வியாபாரம்
மனம் பேசுகிறது பெருமாளிடம்
பணம் பேசுகிறது மாலிடம்
தரிசிப்பவர் கும்பிடுவது பெருமாள்
தரிசிப்பவரை கும்பிடுகிறது மால்
நிறைய ஸ்தலங்கள் பெருமாளிடம்
நிறைய தளங்கள் மாலிடம்
கருட வாகனம் பெருமாளுக்கு
கரண்ட் வாகனம் மாலுக்கு
மனபாரம் இறங்குது பெருமாளிடம்
பொருள் பாரம் ஏறுது மாலிடம்
நடைசாற்றல் உண்டு பெருமாளிடம்
கடைசாற்றல் உண்டு மாலிடம்
லட்டு பிரசித்தம் பெருமாளிடம்
துட்டு பிரசித்தம் மாலிடம்
முடி கொடுக்கிறார்கள் பெருமாளிடம்
முடி த
காற்றடைத்த பையால் உருவானேன்
காற்றடைத்து நான்..
எனக்கென்று விதித்த வரையறையில்..
காயம்பட்டு
கசிய ஆரம்பித்தால்
கருகிவிடும் என் வாழ்க்கை..
ஓட்டையற்று இருக்கும் வரை
ஓட்டை உள்ள மனிதர்கள்
விரும்புகிறார்கள் என்னை...
உயிர்க்காற்றை நிறைத்து
உதைக்கிறார்கள் என்னை
உருண்டோடுகின்றேன் நான்..
இங்குமங்குமாய்
அலைக்கழிக்கிறார்கள்
சில நேரம் மெதுவாக
சிலநேரம் ஆக்ரோசமாக...
மாறிமாறி உதைத்தாலும்
வலி தாங்கும் இடிதாங்கியாக
பழகிவிட்டது என் வாழ்க்கை...
வழிமறித்து நிற்பவரின்
உட்புகுந்து செல்ல
உதைக்கிறார்கள்...
நிற்பவரின் கைகளில்
தஞ்சம் புகுந்தால்
மார்போடு அணைக்கிறார்
ஆறுதலாய் என்னை..
ஒத்த கருத்தோடு
ஒட்டி வாழ்வது
சமூகத்தில் எளிது.
மாற்றுக் கருத்தை
உற்ற கருத்தாய்
உருமாற்ற நினைப்பது
அவனியில் என்றும் பெரிது.
உற்ற கருத்தை
துணிந்து ஒலித்தவன் நீ...
மக்கள் நலம் வாழும்
மாற்றுக் கருத்தை
அவனியில் விதைத்தவன் நீ...
மண்ணில் மறைந்து
ஆண்டுகள் பல ஆனாலும்
அப்பா என்றதும்
பலசமயம்
நினைவில் வருகிறது உன் பா
ரதிஅழகின் உச்சம்
பாரதி பாட்டின் உச்சம்..
ஏழை என்றும் அடிமை என்றும்
எவனும் இல்லை பூமியில்
சமதர்மத்தை காட்டினாய்
இழிவு கொண்ட மனிதர்
இந்தியாவில் இல்லை என்று
சாதி மத பேதத்தை வெறுத்தாய்..
உயிர்கள் அனைத்தும் ஒன்று
உலகிற்கு உவமை காட்டினாய்
காக்கை குருவி எங்கள் ஜா
உண்ணும் அழகைப் பார்த்து ரசித்து
தாமும் உண்டு மகிழ
உண்போரின் பின்னால்
ஒவ்வொருவரும் வரிசையாய்...
எப்போது எழுவார்கள்
என்கின்ற எதிர்பார்ப்போடு
சகஜமாய் காத்திருக்கின்றோம்
திருமண விழாக்களில்
பந்திக்கு முந்துதலின்
புதிய பரிமாணம்