இல்லறச் சுகத்திற்கு
உறவென்ற நரவோடு தினமும் உழன்று
ஊர்மெச்ச வேண்டும் என்ற அவாவால்
உள்ளிருப்பதை வெளியில் காட்டாமல் மறைத்து
உத்தமனாய் காட்டி உலாவி.
நினைத்ததைப் போல் இல்லாமல் வெம்பி
வெளியில் கூறயியலாமல் அழுத்தி தெளிந்து
சோர்வாகி தலை வெடித்து தட்டுத்தடுமாறி
ஆசுவாசப் படுத்தி எழுந்து.
திறமை வளர்த்து சிறந்தவனாகி நிற்கையில்
இல்லறச் சுகத்திற்கு ஆட்பட்ட உடலால்
அடிமையாகி பெண்ணிடம் சிறைப்பட்டு சோர்ந்து
பலமிழந்து பாலகனுக்கு தந்தையாய்.
பட்ட பாடுகளால் படிப்பினை பெறாமல்
பற்பல துன்பங்களுக்கு பாதை அமைத்து
பரதேசியாய் திரிந்து பொருள் ஈட்டி
பிறப்பித்தவர்களுக்கு பிரித்து கொடுத்து.
உயிர்வாழ நினைக்கையில் உதிரம் சுண்டி
உடல் தளர்ந்து பல்வேறு நோய்க்கண்டு
உடன் பிறந்தாறோடு இல்லாளை இழந்து
கண்டவாழ்வு மனித வாழ்வாம்.
----- நன்னாடன்.