தாமதம்
இதில் இணைய மாட்டேன்
மனதில் சபதம் எடுத்தாலும்
சாத்தியப்படுவதில்லை
பல சந்தர்ப்பங்களில்..
நொண்டி சாக்கும்
பொய்யான காரணங்களும்
பலரால் பரிந்துரைக்கப்படுகிறது
அன்றாட வாழ்வில்..
அன்றாட யாத்திரையில்
விரும்பாத நிகழ்வாகவும்
இறுதி யாத்திரையில்
விரும்புகின்ற நிகழ்வாகவும்
அனைவராலும் விரும்பப்படுவது
தாமதம்..