பந்திக்கு முந்து

உண்ணும் அழகைப் பார்த்து ரசித்து
தாமும் உண்டு மகிழ

உண்போரின் பின்னால்
ஒவ்வொருவரும் வரிசையாய்...

எப்போது எழுவார்கள்
என்கின்ற எதிர்பார்ப்போடு

சகஜமாய் காத்திருக்கின்றோம்
திருமண விழாக்களில்

பந்திக்கு முந்துதலின்
புதிய பரிமாணம்

எழுதியவர் : ந. அலாவுதீன் (9-Jan-19, 5:30 pm)
சேர்த்தது : ந அலாவுதீன்
Tanglish : panthikku munthu
பார்வை : 50

மேலே