பொங்கல்
ஊசலாடும்
விவசாயிகளை
ஈசலாய்
ஒருநாள் நினைக்கும்
ஒரு நாள்
அது பொங்கல் எனும்
திருநாள்
நாளெல்லாம் கரியான
உழவனுக்கு அன்று மட்டும்
கரி நாள்
அது உழுகின்ற மாடுகளை
அன்று மட்டும்
தொழுகின்ற நாள்
மனையிலிருந்த கழிவுகளை
எரித்து போகி என்றோம்
மனதில் இருப்பதைத்தான்
எரிக்க மறந்துவிடுகிறோம்
வறுமையின் அடுப்பில்
பால் பொங்குவது
அன்று மட்டுமே
கதிரவனைப் படைக்கின்றோம்
கதிர் தான் அவன் கண்ணீர்
துடைக்க மறுக்கிறது
செந் நெல் விளையும்
பூமியில் செங்கல்
விளைந்தால்
அவனுக்குப் பொங்கல்
எப்படிச் சிறக்கும்