இதயத்தில் தையல் போடும் நிலை

தாரமாக நீயும் வருவேன் என்றாய்
தருமியாக நானும் காத்துக்கிடந்தேன்
அருமையான நேரம் அமையட்டும் என்றாய்
ஆசையோடு நானும் காத்து நின்றேன்
உண்மைக் காதலுக்கு வெற்றி உறுதி என்றாய்
உளமார அதையும் ஏற்றுக் கொண்டேன்

அவ்வப்போது நாமும் சந்திப்போம் என்றேன்
அசட்டையாய் சிரித்து அகன்று சென்றாய்
உன் பிறந்த நாளுக்கு பூங்கொத்தைக் கொடுத்தேன்
ஒரு மலரை எடுத்து ஒதுங்கிக் கொண்டாய்
ஒரேவொரு முத்தம் உன்னிடம் கேட்டேன்
ஓங்கார பார்வையால் பதிலை கொடுத்தாய்

ஓராண்டு காலம் முடியும் வரையில் - உன்னை
ஒரு முறையேனும் காண முயன்றேன்
ஒவ்வொரு முறையும் உன் வாசல் வந்தேன் - உன்
ஒற்றை முடிக்கூட தென்படவில்லை - பூங்காவில்
ஓய்ந்து ஒரு நாள் அமர்ந்த போது - நீ
ஒய்யாரமாய் ஒருவருரோடு ஒட்டிய நிலையில் - என்
மெய்யதிரும்படியான மடல்தனைப் பார்த்தேன்
தையலாய் வருவாயென தவித்த எனக்கு - இதயத்தில்
தையல் போடும் நிலைக்கு வைத்த
தனிப் பெரும் தலைவியே வாழ்க எந்நாளும்.
- - நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (9-Jan-19, 6:45 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 315

மேலே