மார்கழி காட்டிய தை

மார்கழி மாதம் இளங்காலை நேரம்
எங்கும் பனிமூடம் புகைபூத்த வானம் -தன்
வீட்டு வாசலின் முன்னே அந்தப் பெண்
பசுஞ்சாணம் கொண்ட நீர் தெளித்து
தெருவை சுத்தம் செய்தாள், ஈரம் ஆறும் முன்னே
அரிசிமாவினால் அழகான இதயகமலம் கோலம்
போட்டு, அதன் நடுவில் பசுஞ்சாண பீடம் அமைத்து
அதன்மேல் அன்றலர்ந்த பூசணிப்பூவைத்து
தான் போட்ட கோலத்தைக் கண்டு மகிழ்ந்தபோது
எதிர் வீட்டு இளங்காலை, கட்டழகன் ரங்கன் கண்ணில்
பட்டாள் அவள்; அமெரிக்காவிலிருந்து விடுமுறைக்கு
கிராமத்து பாட்டி வீட்டுக்கு வந்திருந்தான் அவன்
அவன் அம்மாவும் அவனோடு அங்கிருந்தாள்
அம்மாவிடம் ரங்கன் அழகிய வண்ண கோலம் போட்ட
அந்த அழகிய பெண் யார் என்று கேட்க, ...................
அடுத்த சில நாட்களில் பேச்சுவார்த்தைகள் ....
பெண் பார்த்தல், நிச்சியதார்தம் என்று எல்லாம்
i ரங்கனின் நாளைய மணமங்கையானாள்.......

ஆம் ரங்கன்- எதிர்வீட்டு சுமதி அதான் அந்த
இவன் கண்டு மயங்கிய கோலமிட்ட மங்கை
இவர்கள் திருமணம் தைப்பொங்கலுக்கு பின்னே
நல்லதோர் முகூர்த்தத்தில் நிறைவேற , பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டுள்ளது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (9-Jan-19, 6:47 pm)
பார்வை : 249

மேலே