மௌன புன்னகை மட்டுமே
நீ நிலவும் இல்லை, நட்சத்திரமும் இல்லை
இவைகளை எல்லாம் அள்ளி சூடிக்
கொள்ளும் வானம் நீ ! என்னோடு நீ
கூட இருக்கும் நேரம் தான் என்
வாழ்வின் வசந்த காலங்கள் ஆனால் நீயோ
நினைவை மட்டுமே எனக்கு அழத்தாய்!
புரிந்துக் கொள்ளும் வரை
நினைக்காவில்லை ! புரிந்துபோது ரசிக்க ஆரம்பித்துவிட்டேன்!
கை கோர்த்து வீதி உலா வேண்டாம்
புல் வேலியில் அமர்ந்து இருவரும்
கதை பேசவோம்
தோள் சாய்ந்து உன் அன்பில்
நினைய – மௌன புன்னகை மட்டுமே
எனக்கு அளித்தாய் - ஆயிரம்
வார்த்தைகள் உன் மௌத்தால் எனக்கு அளித்தாய்
நீ நிலவும் இல்லை, நட்சத்திரமும் இல்லை
இவைகளை எல்லாம் அள்ளி சூடிக்
கொள்ளும் வானம் நீ !