ந அலாவுதீன்- கருத்துகள்

நினைத்ததைப் போல இல்லா வாழ்வே இல்வாழ்வு. தனக்கென வாழாமல் தலைமுறைக்காக வாழ்பவர்களே தரணியில் அதிகம். தங்கள் கவிதையின் கருத்து மனதை தொட்டது.
வாழ்த்துக்கள்.

சிறு வியாபாரிகள் பாடு திண்டாட்டமாக இருக்கிறது. தேவையான பொருளை சீட்டு எழுதிக் கொடுத்து வாங்குவதற்கும் நாமாக சென்று ஒவ்வொரு பொருளாக தேடி எடுப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.பொருளை தேடும்போது நமக்குத் தேவையில்லாத பொருளையும் அல்லது எப்போதோ தேவைப்படும் பொருளையும் சேர்த்து வாங்கி வருகிறோம் என்பதே உண்மை நிலை. தங்கள் வாழ்த்துக்கு நன்றி.



தமிழ் பேச்சை எழுத்தாக மாற்றும் தளம் உள்ளது. அதை பதிவிறக்கம் செய்து
நம்முடைய செல் மூலம் நாம் எழுத வேண்டியதை பதிவுசெய்து எழுத்து தளத்தில் காப்பி பேஸ்ட் செய்துவிடலாம். இது எளிதான வழி.
என்னிடம் இப்போது கம்ப்யூட்டர் இல்லாததால் நான் இந்த முறையைத்தான் பின்பற்றுகிறேன்.

படைத்தவன் ஒருவனே. பிறரின் துன்பம் கண்டு மனம் வருந்தி அவர்களின் மேன்மைக்காக உழைப்பவர்கள் யாவரும் மேன்மக்களே. சாதிகள் இல்லையடி பாப்பா .பாரதி கூறியது தானே.

உள்நாட்டு உற்பத்தி நிறைந்து ஏற்றுமதி பெருகவேண்டும். கற்ற கல்வியால் புத்தாக்க சிந்தனைகள் மிளிர வேண்டும். எல்லோரும் நலம் வாழ வேண்டும். இதுவே எனது அவா. தங்களின் வாழ்த்துக்கு நன்றி


முள்ளுள்ள இயற்கையை ரசித்த விதம்
அருமை.

தங்களின் வாழ்த்துக்கு நன்றி கவிஞரே.

புதுமைகள் செய்ய செய்ய தான் தொழில்
சிறக்கும்.நன்றி













கூடிய காதலால் குதூகலம்
அடைந்து சிறக்கட்டும் அகிலம்

தங்கள் எண்ணம் போல சிறப்புற்று எல்லோரும் நலமாய் வாழ்வோம். தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.

மணக்கும் மல்லிகையை
மணக்கும் கணவனுக்காய்
மனம் வருந்தும் கவிதை.

தன்னை மறந்து உழைப்பதில் பெண்மைக்கு நிகரில்லை.

இன்றைய இளம் தலைமுறையினர் இரவில் அதிகம் கண் விழித்து காலையில் அதிகம் தூங்கி கண் விழிக்கிறார்கள். அதிகாலை விழித்தல் என்பது உடல் நலத்திற்கு மிகவும் சிறந்தது என்பதை உணர்ந்தாலும் எழ மறுக்கிறார்கள்.

காலம் ஒருநாள் மாறும். கவலை யாவும் தீரும்.

உன்னால் கல்லறை நிறைகிறது
கஞ்சி குடித்தால் கஞ்சா போல் ஆகிறது
நீ ஓரக்கண்ணால் பார்த்தல் பற்றி எரிகிறது
இருந்தாலும் உன்னை எனக்கு பிடிக்கிறது.

நிச்சயமாக சொல்கிறேன் தனிமை இனிமை அல்ல. தனிமை வெறுமை தான். இயற்கையை ரசிக்கலாம். நட்போடு ரசிப்பதற்கும், தனிமையில் ரசிப்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. தியானம் கூட சில மணித்துளிகள் தான். நான் தனிமையை மட்டும் நேசிக்கிறேன் என்று சொல்பவர்கள் பழகும் தன்மையில் கோளாறு உள்ளது என்றே அர்த்தம். பழகும் மனிதர்கள் அனைவரும் நல்லவர்கள் அல்ல. அனைவரும் கெட்டவர்களும் அல்ல. பகுத்து பழகுதல் சிறப்பு.


ந அலாவுதீன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே