உகந்தது

காலைப் பொழுது உற்சாக வரவு /
உற்ற கடமையைச்
செய்ய முயற்சியோடு எழுந்திரு /
காலைக்
கதிர்வீச்சுப் பட்டால் நரம்புக்கு வலுவு /
அதனாலே வியர்வை
கொட்டினால் கொழுப்புக்கு அழிவு/

காலைக்காட்சி கண்ணுக்கு அருமை /
கண்டு மகிழ்ந்தால் நெஞ்சுக்குள்
பிறக்கும் புதுமை /
மலரும் பொழுதால்
புது தெம்பு உள்ளத்தில் வரவு /
எழுந்து விடும் புதுப் புது உணர்வு /

பனி மூடிய புல் தரையினிலே/
பாதணி இன்றி நடந்தால் பாததுக்கு உகந்தது /
வண்டு மொய்க்கும் முன் மலர் பறித்து பூசிப்பது பிராத்தனைக்கு உகந்தது /

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (12-Jan-19, 11:14 am)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 76

மேலே