விவசாகியின் ஏக்கம்

இரவு விடிந்தென்ன.?
ஒரு நாள் கடந்தென்ன?
நடந்த ஆண்டு முடிந்தென்ன?
புத்தாண்டு பிறந்தென்ன ?

ஆட்சி மாறியென்ன?
புரட்சி வளர்ந்தென்ன?
கட்சி பெருகியென்ன?
பேச்சு நீண்டென்ன?

மழை பொழிந்தென்ன ?
பனிக் கொட்டியென்ன ?
கதிரவன் எழுந்தாலென்ன?
காளை மாடு பூட்டியென்ன?

பொட்டி சட்டி சுரண்டி என்ன ?
வட்டி குட்டிக்கு வாங்கியென்ன?
தொட்டுத் தூவ விதை நெல் இருந்தென்ன?
கட்டுக்கடங்காத ஆசை பிறந்தென்ன?

வேளாண்மை நிலம் விற்ற பின்னே /
கட்டிடங்கள் விதையிட்ட பின்னே/
கட்டம் போன்ற
வரப்பெல்லாம் மட்டமான பின்னே/
ஏற்றம் இருந்த இடமெல்லாம்
நீத்துச் சுவர் எழுந்த பின்னே/

இயற்கை காடு எல்லாம்
செயற்கை வனமானபின்னே/
செருமிக் கொண்டே தாத்தா
அமர்ந்திருக்கும் ஆலமரமெல்லாம்
அடியோடு போன பின்னே/
மடிந்து போனது விவசாயத் தொழில் அண்ணே/

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (10-Jan-19, 8:21 pm)
பார்வை : 139

மேலே