காதல் சொல்ல ஆசை
என் காதலை உன்னிடம் சொல்ல ஆசை தான்!
உன் கண்களைப்பற்றி மட்டுமே ஒரு மாமாங்கம் ஆகுமே?
பின்பு முழு காதலை எப்படி சொல்லி முடிக்க?
பேசாமல் கல்யாணம் செய்து கொள்.
வாழ்க்கை முழுவதும் சொல்கிறேன் .
பத்தவில்லையா மீண்டும் ஒரு பிறவி எடுப்போம்.
விட்டுப் போனதை தொடர!