உன்னை முதலமைச்சர் ஆக்கறது தான் என் கனவு

அப்பா, எதுக்குப்பா எனக்கு 'அஜயா'-ன்னு
பேரு வச்சீங்க?
@@@@@
உன்னை நடிகையாக்கி நீ பிரபலம்
ஆனவுடனே அரசியல் கட்சி துவக்குவோம்.
நீ தான் அந்தக் கட்சியின் தலைவவி.
@@@@@@@
என்னை நடிகை ஆக்குவேன்னு
சொன்னீங்க. நான் நடிக்கிற படம் சரியா
ஓடலின்னா என்ன செய்யறது.
@@@@@@
வேற மொழிகளில் வெள்ளி விழாக்
கொண்டாடிய படங்களின் கதைகளையும்
அந்தப் படங்களின் பாட்டுக்களின்
மெட்டுகளையும் விலைக்கு
வாங்கிக்கிறோம். அந்தக் கதைகளைத்
தான் நாம படமாக்குவோம். அந்தப்
பாடல்களின் மெட்டுக்களில் நம்ம
பாடலாசிரியர்களைப்
பாட்டெழுதச் செய்வோம்.
@@@@@@
என்னை இரசிகர்கள் ஏத்துக்குவாங்களா
அப்பா?
@@@@@@
உனக்கென்னம்மா அஜயா? உனக்கு
மூன்றெழுத்து உள்ள பேரு. எம்ஜிஆர்
மாதிரி சிவப்பா அழகா இருக்கிற.
உனக்கும்
கணீர் வெண்குலக் குரல். படத்தில்
வ்வொரு
பாட்டுக்கும் கண்டபடி துள்ளிக் குதிக்க,
பல்டி அடிக்க நடன ஆசிரியர்கள் பயிற்சி
தருவாங்க. உன்னுடைய முதல் படமே
திரையிடப்படப் போற எல்லாத்
திரையரங்கிலும் ஒரு வருசம் ஓடற
மாதிரி செய்வேன். நீ பட்டப் படிப்பை
முடிக்க இன்னும் ஒரு வருசம் உள்ளது.
அதுக்குள்ள நான் எல்லா ஏற்பாடுகளையும்
செய்யணும். முதல் படத்துக்கு ஒரு
அருமையான பேரு வச்சு இப்போதிருந்தே
நாளிதழ்களின் உன் அழகான முகத்தைப்
போட்டு விளம்பரம் செய்யணும். படம்
வெளியாகிறதுக்கு முன்னாடியே உலகம்
முழுவதும் உனக்கு இரசிகர் மன்றங்கள்
உருவாகிடும். பத்து வருசத்தில் நீ உச்ச நடிகை (சூப்பர் ஸ்டார்) ஆகிடுவ.
அதுக்கப்பறம் அர்சியல் கட்சி. நீ நம்ம
தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு,
இலக்கியம் சமூகவியல் எல்லாம்
கத்துக்கறதுக்கத் தான் அறநிலையத்
துறை ஆரம்பிச்ச முதல் கல்லூரியில்
பட்ட வகுப்பில் சேர்த்துவிட்டேன். பள்ளிலே
படிக்கிற போதே மாநில அளவில் பேச்சுப்
போட்டி, கட்டுரைப் போட்டி, பாட்டுப்
போட்டிகளில் கலந்து வெற்றி பெற்று
ஏராளமான பரிசுகளை வாங்கியிருக்கிற.
கல்லூரியிலும் மிகச் சிறந்த மாணவியா இருக்கிறதா ஆண்டு விழா அறிக்கையில்
உன் கல்லூரி முதல்வரே தெரிவிச்சார்.
கல்லூரியிலும் பல போட்டிகளில் கலந்து
பல பரிசுகளை அள்ளிக் குவிச்சிருக்கிற.
இது போதுதாம்மா