பணமே என் தெய்வம்

டேய் அற்பேஷு, நீயும் நானும் ஒரே

கட்சில செய்தித்

தொடர்பாளர்களா இருந்த போது உன்


மூஞ்சி சப்பையா இருந்தது. ஒடம்பும்


ஒல்லியா இருந்துச்சு.


@@@@@@

அதுக்கென்னடா ஆக்ரேஷு?

@@@@@@

இல்ல இப்ப உன் மூஞ்சி பூசணிக்காய்

மாதிரி ஊதிப் போய் இருக்குது. ஒடம்பும்


இரண்டு மடங்கு பருத்து இருக்குது.


என்னடா ஆச்சு?

@@@@@@


நான் உன் கூட வேலை பார்த்த கட்சி


கஞ்சம் பிடிச்ச கட்சி. அவுங்க கொடுத்த

சம்பளம் எனக்குக் கட்டுபடி ஆகல. நான்

கலந்திட்ட விவாத நிகழ்ச்சி நடத்தற

தொலைக்காட்சி கொடுக்கற பணத்தை

வச்சுத்தான் குடும்பச் செல்வுகளைச்

சமாளிச்சேன்.

@@@@@

இப்ப....

@@@@@@

இப்ப நான் இருக்கிற கட்சில மாசம்

ஐய்ம்பாயிரம் சம்பளம் தர்றாங்க.

விவாத நிகழ்ச்சிக்குப் போயி என்ன

பேசணும்ங்கிறதை அச்சடிச்சு

மின்னஞ்சலில் அனுப்பிடறாங்க.

பெரும்பாலும் பொய், அவதூறு பற்றிய

கருத்துக்களைத்தான் அனுப்பி

வைப்பாங்க. அதைத்தான் பேசணும்.

நான் கலந்துக்கிற விவாததில் சொந்தமா

ஒரு பொய்யைச் சொன்னா அதுக்குத்

தனியா எங்க கட்சி எனக்கு பத்தாயிரம்

ரூபாயை எனக்கு உடனே அனுப்பிடுவாங்க.

@@@@@

ஒரு பொய்யுக்குப் பத்தாயிரமா?

@@@@@

ஆமாம். மக்கள் நம்பும்படியான

அவதூறைத் திரும்பத் திரும்ப நாலு

தடவை கூறினால் இருபத்தைந்தாயிரம்

ரூபாய். மற்ற கட்சி செய்தித்

தொடர்பாளர்களைப் பேசவிடாமல்

இடைமறித்துக் கொண்டே இருந்தால்

அதுக்குத் தனியா ஐந்தாயிரம். எப்படியும்

என் மாத வருமானம் மூணு

இலட்சத்திற்கும் மேல் இருக்கும்.

வருமானத்துக்குத் தக்கபடி உணவு.

இரண்டு வேளை பிரியாணி, வருவல்.

காலையில் இட்லி பாயா. என் மூஞ்சியும்


ஒடம்பும் கொழுத்துப் போய் இருப்பதற்கு

இதுதாண்டா காரணம். என் கட்சிக்கு

வந்து உன் வருமானத்தைப் பெருக்கிக்

கொள்ளடா.

@@@##

ஆளை விடுடா சாமி. நான் கொள்கை,

குறிக்கோளோட எங்க கட்சிலே

இருக்கிறேன். உன்னை மாதிரி

பணத்துக்காக கட்சி மாறிப்போற துரோகி

நான் இல்லடா.

@@@@@

அட நீ என்னமோ சொல்லிக்க. பணம்

தாண்டா தெய்வம். நமக்குச் சுகமான

வாழ்க்கையைத் தர்றது பணம் தாண்டா..

எனக்குப் பணமே கண் கண்ட தெய்வம்.

@@@@@@

சரிடா அப்பா. நீ போயி உன் தெய்வத்தைக்

கும்பிடு. நான் வர்றேன்.

@@@@@@@@@@@@@@@@@@###@@#

எழுதியவர் : மலர் (13-Jul-25, 1:55 pm)
சேர்த்தது : மலர்91
Tanglish : paname en theivam
பார்வை : 17

மேலே