நொடியா
பாட்டி, பாட்டி எனக்கு வயித்தெரிச்சலா
இருக்குது.
@@@@@@@
ஏண்டி எக்லேஷ்வரி. என்னடி ஆச்சு?
@@@@@@@
எனக்குப் பெண் குழந்தை பிறக்குணும்னு
நம்ம தமிழ்க் கடவுள் முருகப்
பெருமான்கிட்ட வேண்டுதல்
வெச்சிருந்தேன். பெண் குழந்தை பிறந்தா
அந்தக் குழந்தைக்கு 'நிமிஷா'னு பேரு
வைக்கலாம்னு ஆசையா இருந்தேன். நான்
இந்தப் பேரை அடிக்கடி சொல்லிட்டு
இருந்தேன். அதை அடிக்கடு காதில் கேட்ட
எதிர் வீட்டு எட்னேஷிக்கு எனக்கு
முன்னாடி பெண் குழந்தை பிறந்திருச்சு.
அந்தக் குழந்தைக்கு 'நிமிஷா'ன்னு பேரு
வச்சுட்டா பாட்டி. பொறாமையும்
பேராசையும் பிடிச்சவ எட்னேஷி.
@@@@@@@
அடியே எக்லேஷ்வரி பொறாமையும்
பேராசையும் மனுசங்களோட இயற்கை
குணம். நல்ல சிந்தனை உள்ளவங்க
அந்த இரண்டு குணங்களையும்
வளர்ப்பதில்லை. எட்னேஷி
அரைவேக்காடு. ச்சீ அவள் கெடக்கிறா
விடுடி. அவள் 'நிமிஷா'ன்னு அவளோட
பெண் குழந்தைக்குப் பேரு வச்சா நீ உன்
பெண் குழந்தைக்கு 'நொடியா'ன்னு பேரு
வச்சு அந்தப் பேரு இந்திப் பேருன்னு
சொல்லுடி. உன்னோட எதிரி எட்னேஷிகூட
'நொடியா'ங்கிற உங் குழந்தை பேரைச்
சுவீட்டு நேம்னு பாராட்டுவாடி
@@@@@@
மிக்க நன்றி பாட்டி. "நொடியா ஈஸ் எ ஸ்வீட்
இந்தி நேம்" பாட்டி.

