உங்களை வெற்றிகொள்ளுங்கள்

ஒரு நமக்களிக்கும் அன்பளிப்பு இருபத்திநாலு மணி
அலுவலகத்தில் செலவாகின்ற நேரம், ஒன்பது மணி
பயணம் மற்றும் தொலைபேசிக்காக இரண்டு மணி
தொலைகாட்சிக்கு அடிமையாவோம் இரண்டு மணி
உடற்பயிற்சி செய்தித்தாள் சாப்பாடு இரண்டு மணி
அமைதியாகவும் இன்பமாகவும் உறங்கிட ஏழு மணி
விருப்பமானதை செய்ய பொன்னான இரண்டு மணி

இதில்,
குடும்பத்தாருடன் மகிழ்ச்சியுடன் நேரம் கழிக்கலாம்
ஒருவர் அவருக்குப் பிடித்த புத்தகத்தை வாசிக்கலாம்
பாடல் பாடி ஓவியம் போடலாம் தியானம் செய்யலாம்
தனது, மற்றும் வேறு பிள்ளைகளுக்கு பாடம் கூறலாம்
பொதுநலத்தொண்டு ஏராளம் முடிந்ததை செய்யலாம்

ஆனால்,
இந்நேரத்தில் என்ன செய்கிறோம் தெரியுமா?
கையுடன் அலைபேசியிடம் தொடர்ந்து உறவாடுவது
நண்பர்கள் சந்திப்பு எனச்சொல்லி அரட்டையடிப்பது
ஒரு நாள்- ஒரு சினிமா திட்டத்தை செயல்படுத்துவது
ஐபிஎல் ஜேபீஎல் எனும் பேரில் நேரத்தை கொல்லுதல்
கல்யாணம் விசேஷம் இல்லாமல் பார்ட்டி செல்லுதல்
ரீச்சார்ஜிங்கிலும் செல்போனில் கண்ணாடி பார்த்தல்

அப்படியென்றால்,
ஒரு நாளில் கிடைக்கின்ற உபரி நேரம் மிக மகத்தானது
சரியான முறையிலே செலவிட்டால் லாபம் மகத்தானது
வெறுமனே நேரத்தை வீண் செய்தால் அது ஆபத்தானது
இந்த நேரத்தில் நம் எதிர்கால திட்டங்களை வகுக்கலாம்
நமது வாழ்க்கை துணையுடன் அதிக நேரம் கழிக்கலாம்
செஸ் ஆடி சுடோகு போட்டு மூளையை மெருகேற்றலாம்
எவ்வளவோ காரியங்கள் செய்து, மேலும் முன்னேறலாம்

அப்படி இருக்கும் பட்சத்தில்,
இதைப் படித்தபின், சரியாக மூன்று நிமிடம் சிந்தியுங்கள்
எது முடியுமோ அதனை செய்ய சங்கல்பம் கொள்ளுங்கள்
மற்றவர் ஊர் பேச்சில் மயங்காது உங்களை இயக்குங்கள்
வீடு அலுவலகம் சமுதாயம் மூன்றிலும் வெற்றி பெறுங்கள்
இதற்கும் மேலாக நீங்களே உங்களுடன் வெற்றி பெறுங்கள்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (13-May-24, 8:10 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 33

மேலே