விலங்கும் மனிதனும்

பாவம் விலங்கிற்கு பேச தெரியாது
சிரிக்கவும் தெரியாது
தெரிந்திருந்தால் மனிதன் தனக்கு
செய்யும் அநீதி செயலை எல்லாம்
சொல்லிக் காட்டி நீதி கேட்டிருக்கும்
அவன் கீழ்த்தர செயலையெல்லாம்
எள்ளி நகையாடி இருக்கும்

பாவம் விலங்கு பேசத்தெரியாது
சிரிக்கவும் தெரியாது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (14-May-24, 1:16 pm)
Tanglish : vilangum manithanum
பார்வை : 42

மேலே