கோவிலில் கொள்ளை
ஆண்டவன் மீதும் அவன் உறையும்
அற்புத கோவில் மீதும் அன்று
மனிதனுக்கு பயம், பக்தி பெரும்
மதிப்பும் மரியாதையும் இருந்தது
இன்றோ கோவில் செல்வதும் ஒரு களியாட்டம்
ஆகி விட்டது
கொள்ளையர் கோவிலுக்குள்ளும் புகுந்து
தங்கள் கைவரிசை காட்டுகிறார்
குண்டிகள் உடைக்கப் பட்டு பணம் பறிபோகிறது
கர்பகிரகத்துள் புகுந்து ஐம்பொன்சிலைகள்
கொள்ளையடிக்கப் படுகிறது
இவை கலிகாலத்தில் காளியின் கொக்கரிப்பே
ஆனால் ஒன்று கொள்ளையர் புரிந்து கொள்வதில்லை
இறைவன் தங்கள் திருட்டை காண்பதே இல்லை என்று நினைப்பது
அவர்கள் அறியார் இறைவன் தரும் தண்டனை
நீதி மன்றங்கள் கூட தண்டிக்க மறந்திடலாம்
இறைவன் மறப்பதே இல்லை
கொள்ளையர் சரித்திரம் இதற்கு சாட்சி...