அனர்த்தங்கள்
#அனர்த்தங்கள்..
கண் சிமிட்டினால்
களித்திருப்பதாக
யார் அர்த்தம் கற்பித்தார்கள்..?
கண் சிமிட்டித்தான்
நிறைய மின் விளக்குகள்
உயிர் துறக்கிறது
நாடித் துடிப்பு
அடங்குவது போல..!
முழு பவுர்ணமி கூட
தேய்ந்து
காணமல் போவதெல்லாம்
அமாவாசையின்
ஆரம்பம் தான்..
தேய்வது தெரியாமல்
உருமாறி
பின்
ஒன்றுமே இல்லாமல்
இருட்டடிப்பில்..!
மாதா மாதம்
மரணிக்கும்
நிலவிற்காய்
எவரும்
துக்கம் அனுஷ்டிப்பதில்லை..!!
அலங்கரிக்கப்படும்
மேடைகள் எல்லாம்
அழகாய்த்தான
தெரிகிறது
வண்ண வண்ண மலர் செருகளில்
அல்லது தோரணங்களில்..
மலரின் மரணத்தை
நின்று பார்க்க
நேரமிருந்ததில்லை
திருமண கோஷ்டிக்கு..!
திருமணத்திற்கு பிற்பாடு
மேடை பெயர்வதும்
பூக்கள் மரணிப்பதும்
புதிதல்லவே..!
களிப்பதும் ஜொலிப்பதும்
காரண காரியங்களுக்காக
என்று
மின்சார விளக்கு்தான்
அறிவதில்லை
மலரும் மேடையும் அறிவதில்லை
மனிதர்களுமா. ?
#சொ.சாந்தி