ஹைக்கு பரவசம்

ஹைக்கு பரவசம்


ஐ நா

வெளியே உள்ளே
சமத்துவம் தற்கொலை
தனித்துவம் தலைவிரிக்கோலம்

பணம்

தொல்லையை தேட வேண்டாம்
கொடுத்து கெடுப்பது
என் குலத்தொழில்


மன பயம்

கூடி வாழ
கோட்டை கட்டு


தோசம்

குறட்டை விட்டேன்
அடுத்தவன் கண் விழிக்க


நாளிதழ்

இன்றைய பிரபலம்
நாளை கேட்பாரில்லை


பட்டி மன்றம்

நிறுத்த சொன்னேன்
வியந்து போனான்
நான் நடுவில் நிற்க !

மது

புட்டிக்குள்ளே
பெருச்சாளி
கடுந்தவம் காணுது

எழுதியவர் : மு.தருமராஜு (6-Mar-25, 12:54 pm)
பார்வை : 59

மேலே