தூற்றிக் கொள்
தூற்றிக் கொள்
தாமரை இலை மேல் தவழும் நீர்துளியை பார்த்ததுண்டா !
தாமரை பூவைத்தான் ரசித்ததுண்டா !
இளம் தளிர் மழழை மொழி கேட்டதுண்டா….
இளமைக் கல்வியின் வலிமையை பெரியோர் சொல்லக்
கேட்டதுண்டா !
இதனைக் கேட்டது எதற்கு தெரியுமா ?
காலம் நேரம் அதன் பணி செய்கிறது , கேட்காமலே !
கருத்தாய் பிழைக்க தெரியாது போவது யார் குற்றம் !
காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என சொல்ல தான் இயலும் …
காற்றைப் பிடித்து கல்லுரண்டையா செய்து ஊட்ட முடியும் !
காற்று ஒரு கணம் தன்னுடைய இயர் தொண்டை செய்ய
மறுத்ததா ..மறந்ததா… உமக்கு !
விசுவாசமான மானசீக காற்று இடைவிடாது செயல்படுவது
பெரும் பாக்கியம் !
இதனை உணர்தல் வேறு உயர்வாய் போற்றுவது வேறு !
புரிதலும் அறிதலும் அவர் அவர் தேர்வு விருப்பம் !
காலம் அதன் கடனான கடமையை தயவு தாட்சனையின்றி
செய்கிறது …..தன்னிச்சையாக
தாமரை இலை மேல் படரும் நீர் துளி போல் !
இனி எந்த நினையூட்டல் உமக்கு தேவை !
இயற்கை பலவார் நினையுறுத்தும் பாடத்தை கருத்துடன்
சற்றே கற்று அறிய….