ஆனந்த் சுப்ரமணியம் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ஆனந்த் சுப்ரமணியம் |
இடம் | : காரத்தொழுவு |
பிறந்த தேதி | : 28-Dec-1961 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 10-May-2013 |
பார்த்தவர்கள் | : 1524 |
புள்ளி | : 212 |
பிறந்து, வளர்ந்தது - காரத்தொழுவு (திருப்பூர் மாவட்டம், தமிழ் நாடு)
.
தற்பொழுது வசிப்பது - புது தில்லியில்
கதை, கவிதை மற்றும் கட்டுரைகள் எழுதும் பழக்கம் உண்டு.
"ஷீரடி சாய்பாபா - பக்திமாலை" என்கிற நூலை எழுதி வெளியிட்டுள்ளேன் (கவிதை மற்றும் பாடல் வடிவில்).
*கிராமத்து பொங்கல்*
(14.01.25)
விடிகாலை எழுந்திரிச்சு
சுத்தமான குளியல் போட்டு
புத்தாடை அணிந்து கொண்டு
புதுசாய் நாம் தெரிவோம்
பொங்கல் செய்ய அடுப்பின் மீது
பானை தனை வைத்துவிட்டு
அதனுள்ளே அனைத்தையுமே
அளவாக போட்டு விட்டு
நல்லா கொதித்தவுடன்
பாலையுமே சேர்த்துக் கொண்டு
அது பொங்கி ததும்பி வழிகையிலே
பொங்கலோ பொங்கலென்று
மகிழ்ச்சியோடு சத்தமிட்டு
வீட்டிலுள்ள அனைவருமே
குதூகல மனதுடனே
கும்மாளம் போட்டிடுவோம்
இறைவனுக்கு படைத்து விட்டு
பூஜையையும் செய்துவிட்டு
அம்மாவின் அன்பு கலந்த
அமுதமான பொங்கலையும்
ஆவலுடன் சாப்பிடவே
வரிசையாய் அமர்ந்து கொண்டு
சுவையோடு சாப்பிடுவோம்
மலர்
மலரின் வாழ்வு
அதை பரித்ததும்
முடிந்து போவதல்ல
அது
சாமியிடம் சேர்ந்தாலும்
வாழ்ந்து மடிந்த ஆசாமியிடம்
சேர்ந்தாலும்
அதன் பயனை அது
செய்து விடுகிறது
********
செருப்பு
செருப்பின் மகிமை
பார்த்து வியக்கிறேன்
மனித பாதத்தின்
கிரீடமோ அது
வெய்யிலோ மழையோ
சேறோ சகதியோ
தன்னை வருத்தி
பிறர்க்கு உதவுகிறது
மேலும்,
மனிதனின் கால்கள்
பூமித்தாயின் மீது
படாமல் காக்கிறதே
ஆனந்த் சுப்ரமணியம்
தேதி - 06.01.25. நேரம் - காலை 9 மணி
"காதல் என்பது"
இது ஒரு சிறிய கவிதை தொகுப்பு.
30 அத்தியாயங்களை கொண்டது.
"படைப்பாளியின் கண்ணோட்டம்"
காதல் அனுபவம் இல்லாவிடினும்
காதலைப் பற்றிச் சொல்லிவிட்டேன்
இது புதுமை வாய்ந்த காதல் கவிதை
பெயரில்லாமல் கதாபாத்திரங்கள்
உலா வருவது, புதுமை அனுபவம்
"அவன்",
"அவள்"..... என்றே
எடுத்துச் செல்கிறேன் இக் கவிதை முழுவதும்
அவனும், அவளும் தனித்தனி நபர்கள்
என்றே தொடங்கும் என் கவிதையும் இங்கே
விழிகளின் கதிர் ஒளியால் உண்டான காதல்
புரிதல் இல்லாத பக்குவக் காதல்
புரிதல் வந்ததும் புனிதக் காதல்
அறிவும், மனமும் கொண்டாடிய காதல்
உள்ளார்ந்த அன்பால் எழுந்த காதல்
சம
இது ஒரு சிறிய கவிதை தொகுப்பு.
30 அத்தியாயங்களை கொண்டது.
தினம் ஒரு அத்தியாயமாக பதிவிடலாமென்று இருக்கிறேன்.
என் மரணத்திற்கு பின்
என் வாழ்வு எப்படி இருக்கும்
என எனது மனதில் ஆசை
ஒன்று தோன்றியதுவே
அதை என் வரியில் சொல்லிடவே
நானும் நினைத்தேன்
அதற்கு என் அறிவும் என் மனதும்
ஆவலுடன் ஒத்துழைத்ததுவே
எப்பொருளும் எச்செயலும்
நிரந்தரமில்லை
என் உறவும் என் நட்பும்
நான் இருக்கின்றவரையே
அன்றொரு நாள் என் வாழ்க்கை
முடியும் தருணம்
அரை நொடியில் நானும் அதை
உணர்ந்தும் கொண்டேன்
அதை யாரிடமும் பகிரவும்
அவகாசமில்லை
அப்படி ஒரு சூழலில் என்னையும்
வைத்தான்
அவனிடமும் கைகூப்பி கெஞ்சிப்
பார்த்தேன்
சிறிது நேர அவகாசம் கேட்டும்
பார்த்தேன்
இத்தனை நாள் வாழ்ந்த வாழ்வு
நிறைவில்லையா என்றான்
எதற்கா
ஐல்லிக்கட்டு
எங்களுடன் வாருங்கள்
எங்களின் வீர விளையாட்டைப் பாருங்கள்
பாரம்பரியம் பொருள் உணருங்கள்
ஆகையால்.....
தமிழன் சொல்வதைக் சற்று
செவிமடுத்துக் கேளுங்கள்
உண்மைதனை பாருங்கள்
"யாரோ" சொல்வதை புறம் தள்ளுங்கள்
சொந்தக்காரர்கள் நாங்களே
ஆகையால்......
தமிழன் சொல்வதைக் சற்று
செவிமடுத்துக் கேளுங்கள்
எம் உணர்வுகளை மதியுங்கள்
உணர்ச்சிகளைப் போற்றுங்கள்
விதண்டாவாதம் தவிருங்கள்
ஆகையால் .......
தமிழன் சொல்வதைக் சற்று
செவிமடுத்துக் கேளுங்கள்
சேரும் கூட்டம்தனை பாருங்கள்
இது அரசியல் சாரா அமைப்புகள்
எங்கள் மாணவ செல்வங்களின்
கையைப் பிடியுங்கள்
ஆகையால்.........
தமிழன் சொல்வதைக் சற
நட்பும் - தோழமையும்
நம் இதயத் துடிப்பு நின்றாலும்
நண்பன் வந்தால் உயிர்த்தெழுமே
நம் சுவாசக் காற்று நம்மை விட்டாலும்
நட்பு அழைத்தால் உடன் வந்திடுமே
தோழமை என்ற சொல்லுக்கு
தெய்வாம்சம் என்ற பொருளுண்டு
தோழன், தோழி இடையினிலே
மெல்லியதாக ஒரு இழையுண்டு
ஆண்டவன் பார்வையின் முன்னலே
இந்த தோழமை என்றும் இருப்பதுண்டு
நட்பின் இறுக்கம் புரியாது
மற்றவர் பார்வைக்கு தெரியாது
அவரவர் ஆன்மா புரிதலிலே
நட்பின் இலக்கணம் வெளிப்படுமே
நட்பில் இருக்கும் ஆனந்தம்
சொல்லில் விளக்கம் அடங்காது
நட்பில் நிகழும் குறும்புகளும்
நம் துன்பத்தை அறவே விரட்டிடுமே
நல்ல உள்ளத்தின் வெளிப்பாட்டால்
தோழமை
பொய்யான கூட்டம் தன்னில் பொய்யாக தன்னை இணைத்து
அதுதான் மெய்யென்று மனதிற்குள்
சொல்லிக்கொண்டு
பொல்லாத பாசாங்கு யாவையும் செய்துவிட்டு
கடவுள் என்ற சொல்லிற்கு
கல் தான் அர்த்தமென்று
இயற்கை தான் அனைத்திற்கும்
மூலமென்று உரக்க குரல் கொடுத்து
கடவுளை நம்புவரை கண்டபடி ஏசிவிட்டு
சகலமும் தனக்குத்தான் தெரியுமென்று தம்பட்டம்
அடித்துக்கொண்டு
நாத்திகக் கூட்டத்திற்கு
அடி பணிந்து,
பின் தலமையேற்று
தன் கவித்துவத்தின் திறமை
எல்லாம்
தவறாகச் செலவழித்து
அதுதான் சரியென்று வாக்கு வாதம் செய்து கொண்டு
தவறான உலகத்தில் சஞ்சரித்துக்
கொண்டு இருக்கையிலே .....
கலைமகளும் கண்ணீர் வடித்தா
பிறப்பால்
நான் ஆண்பால்
ஆரம்ப உணவாக
இருந்தது தாய்ப்பால்
பிறகு நான் குடித்தது
பசும் பால்
தந்தை தந்தது
அறிவுப்பால்
ஆசான் போதித்தது
ஒழுக்கத்துப்பால்
பள்ளி அளித்த
படிப்பால்
நான் எழுதுகிறேன்
கவிப்பால்
நான் புத்துணர்வு பெற்றது
என் நட்பால்
அவர்கள் காட்டும் அன்பால்
எனை நானும் மறேந்தேன் என்பால்
குடும்பத்தின் புனிதத்தை
அறிந்தேன் உறவால்
என்னுடன் சேர்ந்தது
ஒரு பெண்பால்
பின் எங்கள் திருமணத்தால்
நான் உணர்ந்தது காமத்துப்பால்
எண்களின் கலப்பால்
உருவானது மழலைப்பால்
அனைவரையும் மகிழ்விப்பேன்
என் சிரிப்பால்
யாவரும் பெருமை கொள்வர்
என் நற்பண்பால்
உயிர் கொடுத்து
உருவம் கொடுத்து
ஊணும் கொடுத்து
தன் உடம்பில்
இடமும் கொடுத்து
பூமித்தாய் கேட்டதினால்
தத்தும் கொடுத்து
உனக்கு உணவாக
தாய்பாலும் கொடுத்து
அழுகின்ற பொழுதெல்லாம்
தாலாட்டுப் பாடல் கொடுத்து
சிரிக்கின்ற பொழுது
திருஷ்டிப் பொட்டும் கொடுத்து
படிப்படியாக வளரும் பொழுது
ஆனந்தத்தைக் கொடுத்து
பருவம் அடையும் பொழுது
அரவணைப்பையும் கொடுத்து
மனம் தடுமாறும் பொழுது
ஆதரவும் கொடுத்து
திருமண பந்தத்தில்
உன்னை விட்டும் கொடுத்து
தாம்பத்திய வாழ்க்கையில்
குறுக்கிடாமல் உன் மகிழ்ச்சியை
உனக்கே கொடுத்து
இவ்வளவும் கொடுத்தவள்
தன் வயோதிகத்தில