நாத்திகத்தை புறம் தள்ளி ஆத்திகன் ஆன மனிதன்

பொய்யான கூட்டம் தன்னில் பொய்யாக தன்னை இணைத்து

அதுதான் மெய்யென்று மனதிற்குள்
சொல்லிக்கொண்டு

பொல்லாத பாசாங்கு யாவையும் செய்துவிட்டு

கடவுள் என்ற சொல்லிற்கு
கல் தான் அர்த்தமென்று

இயற்கை தான் அனைத்திற்கும்
மூலமென்று உரக்க குரல் கொடுத்து

கடவுளை நம்புவரை கண்டபடி ஏசிவிட்டு

சகலமும் தனக்குத்தான் தெரியுமென்று தம்பட்டம்
அடித்துக்கொண்டு

நாத்திகக் கூட்டத்திற்கு
அடி பணிந்து,

பின் தலமையேற்று

தன் கவித்துவத்தின் திறமை
எல்லாம்
தவறாகச் செலவழித்து

அதுதான் சரியென்று வாக்கு வாதம் செய்து கொண்டு

தவறான உலகத்தில் சஞ்சரித்துக்
கொண்டு இருக்கையிலே .....

கலைமகளும் கண்ணீர் வடித்தாள்

தன் அருள் பெற்ற தவப்புதல்வன்
தவறான பாதையிலே பயணிப்பதைக் கண்டு

சொன்னாலும் புரியாது, தனக்கும் தெரியாது

அடிபட்டு அடிபட்டு அவதியில் துடித்தால் தான்

சரியான பாதைக்கு தானும் வந்திடுவான்

பின் தடுமாற்றம் இல்லாமல்
தமிழ் மொழியை கையாள்வான்

இரண்டு வழிகளை அவனுக்கு காண்பித்தாள்

ஒன்று....

இதிகாச புராணத்தை படிக்கக் கொடுத்திட்டாள்

அவனும் படித்திட்டான் ஆணவம் தலை தூக்க

கேலியும் கிண்டலுமாய் விமர்சிக்க திட்டமிட்டான்

கலைமகளும் அவன் மீது ஒரு கண் வைத்திருந்தாள்

படிக்க, படிக்க, தன்னையே அதில் இழந்திட்டான்

மனதிலே மாற்றத்தை உணர்ந்திட்டான்

சரியான பாதையை தானும்
தெரிந்து கொண்டான்

இரண்டாவது

தன் உயிருக்கு உத்திரவாதம்
இல்லாத நிலைதனிலே

விபத்தினில் காயம் பட்டு
கண்மூடி படுத்திருக்கையிலே

அந்த திரு ஞானி கொடுத்திட்ட
விபூதி மருந்தின் மகிமையால்

தான் புனர் ஜென்மம் எடுத்தபின் தன் நிலை உணர்ந்தான்

அந்த நடமாடும் காஞ்சி முனிஅருள் புரிந்த காரணத்தால்

ஆத்திகவாதியாகி ஆண்டவணை
கும்பிட்டான்

அதன் பின் "அவன்" புகழை பாடியதால்அவன் புகழும் ஓயவில்லை

அர்த்தமுள்ள வாழ்வுதனை ஆண்டவன் தந்ததினால்

"அர்தமுள்ள இந்துமதம்" எழுதி முடித்திட்டான்

கண்ணன் புகழ் பாடியதால்
வாழ்வில் நடக்கும் சகலத்தையும்

"அ" முதல் "ஃ" வரை மூழ்கி
முத்தையெடுத்து விட்டான்

முத்தையா எனும் பெயர் கொண்ட
"கண்ணதாசன்" கவிஞன் அவன்

என் வாழ்க்கையிலும் ஒர் அங்கமாய்ஆன கவிஞன் இவன்

ஆனந்த் சுப்ரமணியம்
தேதி - 18.11.16. நேரம் - மதியம் 12.45 மணி

எழுதியவர் : ஆனந்த் சுப்ரமணியம் (18-Nov-16, 4:32 pm)
பார்வை : 85

மேலே