மலர் செருப்பு

மலர்

மலரின் வாழ்வு
அதை பரித்ததும்
முடிந்து போவதல்ல

அது

சாமியிடம் சேர்ந்தாலும்
வாழ்ந்து மடிந்த ஆசாமியிடம்
சேர்ந்தாலும்

அதன் பயனை அது
செய்து விடுகிறது

********

செருப்பு

செருப்பின் மகிமை
பார்த்து வியக்கிறேன்

மனித பாதத்தின்
கிரீடமோ அது

வெய்யிலோ மழையோ
சேறோ சகதியோ

தன்னை வருத்தி
பிறர்க்கு உதவுகிறது

மேலும்,

மனிதனின் கால்கள்
பூமித்தாயின் மீது
படாமல் காக்கிறதே

ஆனந்த் சுப்ரமணியம்
தேதி - 06.01.25. நேரம் - காலை 9 மணி

எழுதியவர் : ஆனந்த் சுப்ரமணியம் (6-Jan-25, 9:18 am)
பார்வை : 6

மேலே