தாயன்பு
வயதான பாட்டி ஊட்டிய அம்மா சாதம்
பையனாக வளர்த்துவிட்டது என் வாரிசை
இன்று
அம்மா அன்பால் அரவணைப்பு
மூதாட்டி வாயார வாழ்த்தும் தாயன்பு
தவமிருந்தாலும் தத்தெடுக்க முடியாது !
பலவித பாணியில் தொனியில்
பெயர் சாடல் பலர் கேட்க…..
இவன் என் மகளின் மகன்
எனது பேரன் !
என் மகள் போல் சமையல் செய்வான்.....
என் சமத்து !
அவனுக்கு என் மகள் சமையல் அலாதி பிரியம் ...
அவனுக்கு கிளவி சமையல் ருசிக்காது ....
ஆனால் என் பேரன் என்னை விட்டு பிரியமாட்டான் !
இப்போ என் பேரன் .....
யார் சாயல் சொல்லு பார்ப்போம் !
என்ன யூகிக்க முடியவில்லையா ?
நான் அதைச் சொல்ல மாட்டேன் ……..
என் மகளிடம் கேட்பாயாக…..