தமிழர் கனவு

கட்டுக் கதை புது வேடம் போடவே
நட்டுக் கதை புதுக்கரு ஏற்கிறது !
பண்முக திராவிட சூது தயாராக
கண்கள் காது கபடம் தேடுது

புளித்தப் போன கதிர்கால மன்றாடல்
களித்து ஆளுது மதிர்ச்சுவர் மன்னிப்பு
கழகம் கவரும் எதிர்தார் இனசேர்க்கை
பழகு தவம் மதியெழ அனுசரிப்பு…..

பழகு தமிழ் தமிழர் கவியேற்றம்
பிழை தவறா தவமேன் ஜீவிதம்
பணமுடிச்சு தந்தோர் புவிசார் புகழ்
பண்பு நலன் தவமேற்க பவ்வியம் பாரீர் !

பண்டைத் தமிழன் இனங்காத்த வன்மம்
விண்னை தழுவும் மாசிலா சின்னம்
கார் முகிழும் மனமுறுகி சிந்திட
பார் புகழ் தமிழிசை சில்லென்று ஒலித்திடுமே !

எழுதியவர் : மு.தருமராஜு (6-Jan-25, 5:37 pm)
Tanglish : thamizhar kanavu
பார்வை : 20

மேலே