அமிர்தா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  அமிர்தா
இடம்:  அந்தியூர் - ERODE
பிறந்த தேதி :  02-Jul-1981
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  10-Nov-2011
பார்த்தவர்கள்:  463
புள்ளி:  32

என் படைப்புகள்
அமிர்தா செய்திகள்
அமிர்தா - எண்ணம் (public)
17-Jun-2015 12:00 am

தமிழகத்தின் அவல நிலை

தமிழகத்தில் உள்ள மொத்த பள்ளிகள்
துவக்கப் பள்ளி 5 ம் வகுப்பு வரை = 24208
நடுநிலைப் பள்ளி = 6325
உயர்நிலைப் பள்ளி = 2143
மேல்நிலைப்பள்ளி = 1856
மொத்தம் = 34532
(2005 - 2006 கணக்கெடுப்பின் படி_

மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை = 13 (...)

மேலும்

அமிர்தா அளித்த படைப்பில் (public) vellurraja மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
18-Jan-2014 2:52 pm

மூணாவது படிக்கையில
ஆத்தாளோட சுள்ளி பொறுக்க போய்
கஷ்டபடரப்ப
செத்து போற மாதிரி இருந்துச்சு,

ஐந்தாவது போகயில
ஆதாளையு எண்ணையு
விட்டுட்டு போன
அப்பன்கூடையே - நானு
செத்துரலாமுன்னு தோணிச்சி,

வயசுக்கு வந்து
ஆறு வருசமா - எவனும்
சீண்டாதப்ப அத நெனச்சு
எட்டிக் காய தின்னு
செத்துரலாமுன்னு நெனச்சே,

எப்படியோ வாக்கப்பட்டு
ரண்டு புள்ள பெத்துக்கரதுக்குள்ள
செத்து பொலச்செ

இந்த குடிகார ஆள வெச்சுட்டு
இதுக ரண்டையும் காப்பாத்த
காடு மேடெல்லாம் சுத்துரப்ப
ஆண்டவா இந்த உசுர
எடுத்துக்க மாட்டயான்னு தோனிச்சு

அதுக ரண்டும் கரையேறி
வாயில வராத சீமைக்கு
வேலைக்கு போயிடுசுக
எனக்கு சந்தோச

மேலும்

கருத்து அளித்த வெள்ளூர் ராஜா, ராஜன் அவர்களுக்கு நன்றி 07-Mar-2015 5:48 pm
கண்ணை இடுக்கிக் கொண்டு ஏக்கத்தோடு பார்க்கும் ஒரு மூதாட்டியின் கண்கள் சொல்லும் ஆயிரம் கதைகள் ! அவற்றை சில வரிகளில் அருமையாய்ச் சொன்ன இந்த படைப்பு அந்த பாமர மூதாட்டியையே கண்முன் நிறுத்திவிடுகிறது ! தொடருங்கள் தோழரே .. 02-Mar-2015 12:27 pm
அட்ரா சக்க....! 02-Mar-2015 12:17 pm
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி 02-Mar-2015 11:42 am
அமிர்தா - அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Aug-2014 5:49 pm

மகளுக்கு ஒரு நீதி
மருமகளுக்கு ஒரு நீதி
என்று வழங்குமுலகில்
கிடைக்குமோ சம நீதி.!?

மேலும்

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!?????????????????????? 06-Aug-2014 7:09 pm
நீங்கள் மாமியார் ஆகும்போது கூடவா? 06-Aug-2014 7:05 pm
கிடைக்கவே கிடைக்காது என்பதுதான் என் கருத்து. கருத்துக்கு மிக்க நன்றி. 06-Aug-2014 7:04 pm
சரியான பதில் கிடைக்கும் என்று நினைக்கீர்களா 06-Aug-2014 7:02 pm
அமிர்தா - அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Aug-2014 6:02 pm

நீதிக்குப் பின் பாசம்
என்று வாழ்ந்தனர்
அன்றைய மன்னர்கள்..!

பாசத்துக்குப் பின் நீதி
என்கின்றனர்
இன்றைய அரசியல்வாதிகள்.!?

மேலும்

என் வரியை விட உங்கள் கருத்தே சரியாக, பொருத்தமாக உள்ளது. உண்மையான கருத்துக்கு மிக்க நன்றி. 06-Aug-2014 7:06 pm
மன்னிக்க வேண்டும் தோழி, பாசம் மட்டும்தான் அதற்க்கு பின் எதுவும் இல்லை இன்றைய அரசியல்வாதிகளுக்கு 06-Aug-2014 7:01 pm
ராம் மூர்த்தி அளித்த படைப்பில் (public) vellurraja மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
05-Aug-2014 2:05 pm

இணயத்தில் தேடியெடுத்து
நடிகைகளின்
பள்ளங்களையும் மேடுகளையும்
நண்பர்களிடம்
பகிர்ந்தேன்.

குமரிகளின்
குறும்படங்களை
வாட்ஸப் குழுக்களிலும்
அனுப்பினேன்.

பெண்கள் எவரேனும்
எதிர்வரில்
மதிப்பெண்கள் தர
அவர்களை பொருள்களாய்
பாவித்தேன்.

நண்பர்கள் ரசித்தார்கள் .
ரசிக்க ரசிக்க தேடினேன் .
தேடித்தேடி கொடுத்தேன் .
மகிழ்வித்தேன்.
மகிழ்ந்தேன் .

பின்னொரு நாள்
நான் தங்கைகளோடு
கடைத்தைருவில்
நடந்தபோது
நண்பன் ஒருவன்
எதிரில் வர....

ஹாய் என்று
ஆங்கிலம் கலக்க
அரைமணி நேரம்
அளந்தான் .

அளப்பு முழுக்க
அவன் கண்கள்
அளந்தபடி
அலைந்து கொண்டிருந்தது.!

குற்றவாளி
யாரென்று

மேலும்

அண்ணே ! உங்க கோபம் கரெக்ட்ண்ணே. உங்க எழுத்துக்கள்ள நான் என்ன பாக்கறன் அண்ணே . ஒரே அலைவரிசை குரல்கள் .... 05-Aug-2014 10:18 pm
திருத்தம்-வீதி,வீதியை =வீதி வீதியாய்.. 05-Aug-2014 9:57 pm
கொடுத்தவன் முதல் குற்றவாளி..எனில்,வீதி,வீதியை அலறிக் கொண்டிருந்ததை கேட்டுக் கொண்டு இருந்தோமே..நாம் இரண்டாவது குற்றவாளி அல்லவா.? பணத்திற்காகவோ,சிந்த அரிப்புக்காகவோ ஒருவன் எழுதி,அதனை பொதுவில் வைக்கும்போதே,எதிர்த்துக் கேட்டிருந்தால்,அல்லது புறக்கணித்து இருந்தால்.தனது தாயிடமோ,மகளிடமோ,சகோதரியிடமோ கேட்கத் துணியாத,காட்டத் துணியாத இது போன்ற விஷயங்களை, தொடர்ந்து எழுதியிருக்க மாட்டார்களே..! நாம் ரசிக்கிறோம் என்பதால்தான் கொடுத்தேன் என்று கயவாளித் தனமாக சொல்லித் தப்பித்துக் கொள்வதற்கு ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுத்துவிட்டோம். "இனியொரு விதி செய்வோம்." இனியாவது ஒரு விதி செய்வோம்..! 05-Aug-2014 9:56 pm
சிந்திக்க வைத்த தங்கள் சிந்தனை வெகு சிறப்பு நண்பரே 05-Aug-2014 9:32 pm
அமிர்தா - எண்ணம் (public)
05-Aug-2014 5:48 pm

மனிதனின் வாழ்வுக்கு ஒவ்வொரு சொட்டு நீரும் அவசியம்,

மேலும்

ஆம் 26-Dec-2014 3:23 pm
கண்டிப்பாக அவசியம் . 20-Aug-2014 8:20 pm
உண்மைதான் 05-Aug-2014 8:30 pm
உண்மை. 05-Aug-2014 8:26 pm
அமிர்தா - அமிர்தா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Feb-2014 1:05 pm

நாகரீக நடைபாதை
நிபந்தனைகள் ஆயிரம்
விவேகம் வெல்லும்

கட்டை ராஜாவின் கட்டளை!!

நெடுக்காய் நகர்ந்தால்
குறுக்காய் வெட்டு

வாழ்வும் - மரணமும்
இங்கே நிர்ணயம்

நிலைகள் மாறும்
நிமிடங்கள் மாறும்

முன்னோக்கி நகர்ந்தால் மரணம்
பின்னோக்கி நகர்ந்தால் பிழை

இங்கு
தற்காப்பும் தாக்குதலும்
சந்ததி காக்க போராட்டம்

சந்தோசிக்க ஏதுமில்லை
துக்கப்பட ஒன்றுமில்லை

சட்டங்கள் மாறும்
கட்டங்கள் மாறும்

நகந்து செல்
ஒவ்வொரு நகர்விலும்
நம்பிக்கையோடு

சதுரங்கம் - சமுதாய வழிகாட்டி
சமுதாயம் - சதுரங்க விளையாட்டு

மேலும்

அருமை...சமுதாய விளையாட்டு 26-Dec-2014 3:25 pm
நன்றி தோழரே 11-Feb-2014 2:18 pm
அருமை தோழா 10-Feb-2014 9:17 pm
நன்றி நண்பரே 10-Feb-2014 2:35 pm
அமிர்தா - அமிர்தா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Jan-2014 2:47 pm

நிலவே !
உன் ஒளி பட்டிட
என் உயிர் பரிணாமங்கள்
உயிர் தெழுகின்றன,

சிற்றுடல் காணும் வேலை
நீர்! கண்ட மரமாய்
என் விரல் வேர்கள்
துளிர் விட எண்ணுகின்றன,

சிகரங்களின் சிராயிப்பால்
சிலேடையாய் நொறுங்குகிறது
எனதுள்ளம்,

வெப்பத்தின் கதிர்வீச்சில்
வேர்களும் கசிகின்றன,

வண்ண மலர்களின் இதழ்களில்
தேன் தேடும் விசித்திர
வண்டாய் திரிகின்றேன்,

காற்றின் இடையில் கை
சேர்த்து இருக்கும் வண்ணம்
இசைகின்ற தென்றலுக்கும் - இன்பம்
காணும் போது - உயிர் விதை
தூவி - உயிர் காணும் வண்டுக்கும்

உறவுகள் புரியாமற் போயினும்
உடல்களின் உணர்வுகள்
ஒன்று சேர்கின்றன...

மேலும்

இது.. பிரியா உறவு..! 19-Jan-2014 1:03 pm
அமிர்தா - கீத்ஸ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
15-Jul-2014 10:13 am

இன்று கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள்..

காமராஜர் பொன்மொழிகள்

* நாடு உயர்ந்தால் நாம் உயர்வோம்

* அரசு என்பது எல்லா மக்களுக்குமே சொந்தமானது

* படித்த ஜாதி, படிக்காத ஜாதி என்றொரு ஜாதி உண்டாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

* மாணவர்கள் அரசியலில் ஈடுபட வேண்டியதில்லை. அரசியல்தான் நாட்டுக்கு அஸ்திவாரம். அதைப்பற்றி மாணவர்கள் நன்கு தெரிந்துகொள்ள வேண்டும். அரசியலைப்பற்றி சிந்திக்காமல் இருப்பது ஆபத்து

* திட்டம் மக்கள் திட்டமாக இருக்க வேண்டும். அத்துடன் மக்கள் ஒத்துழைப்பும் வேண்டும். மக்கள் ஒத்த (...)

மேலும்

நன்றி கீத்ஸ் அவர்களே, கருமை வீரரை பற்றி சொல்ல ஆயிரம் ஆயிரம் விசயங்கள் உள்ளது, நமக்கு தெரிந்த விசயங்களை அடுத்தவருடன் பகிர்ந்து கொள்வது என்பது போற்றப்படவேண்டிய எண்ணம் தான் நன்றி, 15-Jul-2014 12:43 pm
அமிர்தா - அமிர்தா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
13-Jul-2014 1:41 pm

ஒரு பெரும் ஆதங்கத்தோடு இந்த என்னத்தை சமர்பிக்கிறேன்

எங்களது பகுதியில் நூற்றாண்டு அரசு மேல்நிலை பள்ளி உள்ளது, பல ஆயிரம் பெரிய மனிதர்களை உருவாக்கிய பள்ளி அது, இன்று பல வசதிகளுடன் இயங்கும் இதில் வகுப்பறைகள் எல்லாம் வெறுச்சோடி கிடக்கின்றது, அனைத்து மாணவர்களும் பெற்றோர்களும் தயார் பள்ளியை நோக்கியே ஓடுகின்றனர், இதன் காரணம் தான் என்ன?
அரசு பள்ளியில் தரமான கல்வி அளிப்பதில்லையா? அல்லது தரமற்ற ஆசிரியர்களை தேர்வு செய்து பணியில் நியமிக்கப்பட்டுள்ளனரா?

ஒரு ஆசிரியர் தனியார் பள்ளியில் பணியில் இருக்கும (...)

மேலும்

அமிர்தா - மனு (public) சமர்ப்பித்துள்ளார்
13-Jul-2014 1:40 pm

ஆயிரம் சட்டம் இயற்றினாலும், ஒப்பந்தங்கள் போட்டாலும் இலங்கை கடற்படை காவலர்களால் நமது மீனவர்கள் கொல்லப்படுவதும் கொடுமைப்படுத்த படுவதும் தீரவில்லை,

இதற்கு அரசாங்கம் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்

நமது கடல் எல்லையை துல்லியமாக அளந்து சொல்ல வேண்டும், மேலும் நமது மீனவர்களின் விசை படகுகளில் கடல் மையில் தூரத்தை அளக்கும் கருவி பொருத்தப்பட வேண்டும்.
படகு புறப்படும் நேரம், அது செல்லும் திசை மற்றும் அது கடக்கும் தொலைவு போன்ற
படகுகளின் செயல்பாடுகள் அனைத்தையும் நமது கடற்படை காவலர்களால் கண்காணிக்கப் படவேண்டும்.

அரசாங்கம் இதை செயல் படுத்தப்பட வேண்டும்

மேலும்

அமிர்தா - மனு (public) சமர்ப்பித்துள்ளார்
13-Jul-2014 1:18 pm

ஒரு பெரும் ஆதங்கத்தோடு இந்த மனுவை சேர்க்கிறேன், இது சரியென்றால் வழிமொழியுங்கள்.

எங்களது பகுதியில் நூற்றாண்டு அரசு மேல்நிலை பள்ளி உள்ளது, பல ஆயிரம் பெரிய மனிதர்களை உருவாக்கிய பள்ளி அது, இன்று பல வசதிகளுடன் இயங்கும் இதில் வகுப்பறைகள் எல்லாம் வெறுச்சோடி கிடக்கின்றது, அனைத்து மாணவர்களும் பெற்றோர்களும் தனியார் பள்ளியை நோக்கியே ஓடுகின்றனர், இதன் காரணம் தான் என்ன?

அரசு பள்ளியில் தரமான கல்வி அளிப்பதில்லையா? அல்லது தரமற்ற ஆசிரியர்களை தேர்வு செய்து பணியில் நியமிக்கப்பட்டுள்ளனரா?

ஒரு ஆசிரியர் தனியார் பள்ளியில் பணியில் இருக்கும் போது 100% தேர்ச்சியை கொடுக்கும் போது அவரே அரசு பள்ளிக்கு பணிக்கு வர

மேலும்

எளிய வழி ஒன்று உள்ளது அரசாங்க வேலையில் இருக்கும் அனைவரும் தம் பிள்ளைகளை அரசாங்க பள்ளியில் மட்டுமே படிக்க வைக்க வேண்டும் என்கிற முடிவை அரசாங்கம் எடுக்க வேண்டும்...தனியார் பள்ளி நிர்வாகம் எங்கெல்லாம் தன் கிளைகளை வைத்துள்ளதோ அங்கெல்லாம் உள்ள ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொடுக்க வேண்டும் என்கிற சட்டத்தையும் அரசாங்கம் கொண்டு வர வேண்டும்...வரவுக்கு மேல் செலவு இருந்தால் தவிர தனியார் பள்ளிகளை மூட இயலாது... 24-Feb-2015 3:12 pm
அட அரசு பள்ளிகளுக்கும் 100% கட்டாய தேர்ச்சி பெறவைக்க வேண்டுமென்று சொல்லி அதையும் மதிப்பெண் எடுக்க வைக்க பட்டறையா மாத்திட்டா மொத்த நாடும் சூப்பரா மாரிடும் 07-Aug-2014 9:33 pm
நன்று தோழரே, அரசு பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் அனைத்து குழந்தைகளையும் தன குழந்தைகள் போலவே பாவித்து கல்வி கற்றுத்தர வேண்டும், 16-Jul-2014 10:13 am
உண்மை உண்மை!!! அரசு பள்ளியில் இருக்கும் ஆசிரியர்களின் மெத்தனபோக்கே தனியார் பள்ளியை நோக்கிய மோகத்திற்கு காரணம்... ஆனால் அதை மட்டுமே காரணம் கூறிவிட முடியாது..... ஏனென்றால் அரசு பள்ளியிலும் சிறப்பான ஆசிரியர்கள் உள்ளனர் இதற்கு அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.... 16-Jul-2014 9:32 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (91)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ப தவச்செல்வன்

ப தவச்செல்வன்

திண்டுக்கல்
PJANSIRANI

PJANSIRANI

நாமக்கல்
சந்தோஷ்

சந்தோஷ்

தருமபுரி

இவர் பின்தொடர்பவர்கள் (91)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (91)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
பூவிதழ்

பூவிதழ்

குளித்தலை
மலர்91

மலர்91

தமிழகம்

என் படங்கள் (3)

Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே