புரியா உறவு

நிலவே !
உன் ஒளி பட்டிட
என் உயிர் பரிணாமங்கள்
உயிர் தெழுகின்றன,

சிற்றுடல் காணும் வேலை
நீர்! கண்ட மரமாய்
என் விரல் வேர்கள்
துளிர் விட எண்ணுகின்றன,

சிகரங்களின் சிராயிப்பால்
சிலேடையாய் நொறுங்குகிறது
எனதுள்ளம்,

வெப்பத்தின் கதிர்வீச்சில்
வேர்களும் கசிகின்றன,

வண்ண மலர்களின் இதழ்களில்
தேன் தேடும் விசித்திர
வண்டாய் திரிகின்றேன்,

காற்றின் இடையில் கை
சேர்த்து இருக்கும் வண்ணம்
இசைகின்ற தென்றலுக்கும் - இன்பம்
காணும் போது - உயிர் விதை
தூவி - உயிர் காணும் வண்டுக்கும்

உறவுகள் புரியாமற் போயினும்
உடல்களின் உணர்வுகள்
ஒன்று சேர்கின்றன...

எழுதியவர் : அமிர்தா (17-Jan-14, 2:47 pm)
Tanglish : puriyaa uravu
பார்வை : 122

மேலே