வேற்றுமையில் ஒற்றுமைபொங்கல் விழா கவிதைப் போட்டி

தை பிறந்தால் வழி பிறக்கும்
அன்பு பெருகும்...
உறைவிடங்கள் தூரமாயினும்
உள்ளங்கள் இணைந்திருந்தால்.
வேற்றுமை மறையும்...
வானவில்லின் நிறம் ரசிக்கும் நாம்
நம்மோடு இருப்பவர்களின் நிறத்தையும் ரசித்தால்.
பொறுமை வளரும்...
தன்னை தோண்டுகிறவனையும்
தாங்குகின்ற பூமி போல் மனம் இருந்தால்
பொறாமை மறையும்...
சண்டை போட்டாலும் நொடிப்பொழுதில்
நண்பா என அழைக்கும் உள்ளம் இருந்தால்
விருந்தோம்பல் பெருகும்
காகம் போல் பகிர்ந்து உண்ணும் பண்பு இருந்தால்
தை பிறந்தது
தமிழனே! தலைமகனே!
வேற்றுமையில் ஒற்றுமை காண
உலகம் உன்னை உயர்ந்து பார்க்க
நேரம் வந்தது...
தை பிறந்ததால்...

எழுதியவர் : (17-Jan-14, 2:46 pm)
சேர்த்தது : Sathyaangel
பார்வை : 53

மேலே