சதுரங்கமும் - சமுதாயமும்
நாகரீக நடைபாதை
நிபந்தனைகள் ஆயிரம்
விவேகம் வெல்லும்
கட்டை ராஜாவின் கட்டளை!!
நெடுக்காய் நகர்ந்தால்
குறுக்காய் வெட்டு
வாழ்வும் - மரணமும்
இங்கே நிர்ணயம்
நிலைகள் மாறும்
நிமிடங்கள் மாறும்
முன்னோக்கி நகர்ந்தால் மரணம்
பின்னோக்கி நகர்ந்தால் பிழை
இங்கு
தற்காப்பும் தாக்குதலும்
சந்ததி காக்க போராட்டம்
சந்தோசிக்க ஏதுமில்லை
துக்கப்பட ஒன்றுமில்லை
சட்டங்கள் மாறும்
கட்டங்கள் மாறும்
நகந்து செல்
ஒவ்வொரு நகர்விலும்
நம்பிக்கையோடு
சதுரங்கம் - சமுதாய வழிகாட்டி
சமுதாயம் - சதுரங்க விளையாட்டு