யதார்த்தம் என்பது அவரவர் வேதங்கள்

வெளிச்சத்தில் உனைத்தேடி
விளங்கினேன் நீ இருளென்று....

கும்மிருட்டில் உனைக் கும்பிட்டு
குதூகலித்தேன் நீ வெளிச்சமென்று...

இருளுக்கும் வெளிச்சத்துக்கும்
இடைப்பட்ட நிலையுண்டோ ?

புத்திக்கு எட்டாததால் மீண்டும்
புலம்பத் தொடங்கினேன்....
கடவுளே இல்லை என்று......!!

விடையைச் சொல் இறைவனே
நீ எங்கிருக்கிறாய்........

சட்டைப் பை ஓட்டையிலிருந்து
தவறி விழுந்த ஒத்தை ரூபா நாணயம்...

திருவோட்டில் விழவும்...மகா
கஞ்சனான என்னை
நீ நல்லாருக்கணும் சாமி என்றான்
யாசித்து இருந்தவன்.....

அவன் வாழ்த்தை விட....
அந்த ஒரு ரூபா அநியாயமா போயிட்டுதே என்ற
ஆதங்கத்தில் நடையைக் கட்டினேன்....

சட்டை ஓட்டை வழியே பார்த்தேன்
மனசுக்குள்ளும் மிகப் பெரிய கிழிசல்.....

கிழிசலை தைத்தேன்
அணிந்திருந்த சட்டையில்
தழும்புகள் மறைக்கப் பட்டிருந்தது......

அழகாக........

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (10-Feb-14, 12:26 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 100

மேலே