கவிதையின் உணர்வுகள் வெறும் கண்களுக்குத் தெரியாது

மழலைப் பட்டாம்பூச்சிகளின்
மனச்சிறகுகள் அழகாய் அடித்து
மெல்ல அமரும் வண்ணப் பூக்கள்.......

நீர்ப் பூங்காவில் நிமிர்ந்தும் குனிந்துமாய்
நிற்கின்ற பல பொம்மை வடிவங்கள்....

அவற்றிற்குள் உயிரோட்டம் உண்டு....

அது மகிழ்ச்சியூட்டும்
அது பயமுறுத்தும்
அது அன்போடு சுமந்து கொள்ளும்
அது திருகிக் கொள்ள காது கொடுக்கும்...

குழந்தைகளை கேளுங்கள்....

அது கற்களால் செய்யப் படவில்லை...
கவிதைகளால் செய்யப்பட்டது
என உணர்த்துவார்கள்.......

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (10-Feb-14, 11:38 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 76

மேலே