அறிஞர் மேதவிகளே

எம்மை
பித்தர்கள் என்றென்னி
கற்களை எரியும்
அறிஞர் மேதவிகளே!

ஆசைகள் கட்டிப்ப்போட்ட
அடிமைகளே!

மந்தை கூட்ட்த்தின்
சாரதிகளே!

கனவுக்குள் வண்ணம் தேடும்
விஞ்ஞனிகளே!

நாங்கள் பித்தர்கள் தான்
உண்மைகளின் பரினாமங்களை
கண்டு கொண்டதால் – நாங்கள்
பித்தர்கள் ஆனோம்

நாங்கள் நிழலை பிடித்துக் கொண்டு
வேதந்தம் பேசுவதில்லை
பிறர் வயிற்றெரிச்சலில்
குளிர் காய வேண்டிய
அவசியமும் எங்களுக்கில்லை

காற்று செல்லும்
திசையெல்லாம் செல்லும்
பாய்மரம் போல்
காலத்தின் படி செல்வதால்
நாங்கள் பித்தர்கள் ஆனோம்!

வானவில்லில்
வண்ணம் திருடி
கனவுக்கு வர்னம் பூசும் தேவையும்
எங்களுக்கு ஒரு போதும் நேர்ந்த்தில்லை

அறிஞர் பெருங்கோடிகளே!
கடவுள்
என்ற பெயரில் – தெருவுக்கொரு
உண்டியல் வைத்தது யார்?

ஜாதி இரண்டை
சரம் சரமாய் கோர்த்து
பாமரர் காதுகளில்
சூட்டி வைத்தவர் யார்?

ஜாதி சங்கம் அமைத்து
ஜாதிகொரு சட்டம்
ஜாதிகொரு சலுகை
கடவுளையே
ஜாதி ஜாதியா பிரித்து வைத்த்து யார்?

மதவெறிப் பிடித்து திரியும்
மந்தை கூட்ட்தின்
சாரதிகள் யார்?
சொல்லுங்கள் - அறிஞர் பெருங்கோடிகளே!
சொல்லுங்கள்!

சமத்துவம் விழித்துக் கொண்டது
பாமரனும் கேள்வி கேட்கிறான்

கடவுளை
கூறுப்போட்டு- கூவி கூவி
விற்பவர் யார்?

கோவிலை
குத்தகைக்கு விட்டு- வயிறு
வளர்ப்பவர் யார்?

காற்றை
கோணிப் பைக்குள் அடக்கி
சுமந்து செல்லும் – உழைப்பாளிகளே!
உம் இரத்த்தை உறிஞ்சுவது யார்?

சித்தம் கலங்கினாலும்
சிதைந்துப் போன
அறிவைக் கொண்டு
மனிதனை மனிதன் – சந்தையிலே
பாடி பாடி விற்பவர் யாரோ?
சொல்லுங்கள் அறிஞர் பெருங்கோடிகளே!
சொல்லுங்கள்!

உழைப்பாளிகளின்
வயிறு ஒட்டி
கோணி சும்ந்தே முதுகு வளைந்த
சுமைத் தாங்கிகளின் வாழ்வு மட்டும்
நிமிரவே இல்லையே
யார் காரணம்
சொல்லுங்கள் அறிஞர் பெருங்கோடிகளே!
சொல்லுங்கள்!

அசோக் ப்ரியன் – 24.11.2003

எழுதியவர் : ashok priyan (10-Feb-14, 11:36 am)
பார்வை : 63

மேலே