தோழா தோள் கொடு

தோழா தோள் கொடு,
நாம் வீழாமல் தாங்கி நிற்க...
தோழா விரல் கொடு,
நம் கைகள் இணைந்திருக்க...
துயரத்தின் முடிவு தூரமில்லை...
தூக்கத்தின் முடிவில் ஓர் விடியல் உண்டு !
வலிகள் நீக்கி நடை போடு ...
வாழ்க்கைப் பயணம் தொடரட்டுமே!
கண்ணீர் கடலாய் பெருக்கெடுத்தால் ...
கப்பல் செய்து பயணிப்போம் !
சோகம் சேரும் நேரங்களில் ...
பகிர்ந்து,மறந்து...சிரித்துடுவோம்!
தோழா தோள் கொடு...

எழுதியவர் : ரோஜா மீரான் (10-Feb-14, 1:36 pm)
பார்வை : 292

மேலே