எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தமிழகத்தின் அவல நிலை தமிழகத்தில் உள்ள மொத்த பள்ளிகள்...

தமிழகத்தின் அவல நிலை

தமிழகத்தில் உள்ள மொத்த பள்ளிகள்
துவக்கப் பள்ளி 5 ம் வகுப்பு வரை = 24208
நடுநிலைப் பள்ளி = 6325
உயர்நிலைப் பள்ளி = 2143
மேல்நிலைப்பள்ளி = 1856
மொத்தம் = 34532
(2005 - 2006 கணக்கெடுப்பின் படி_

மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை = 136812 பேர் உள்ளனர்
ஆனால் பள்ளியில் படிக்கும் குழைந்தைகள் ஆசிரியர்களின் எண்ணிக்கையை விட குறைவுதான்

தனியார் பள்ளியில் பணிபுரியும் ஒரு ஆசிரியர் வாங்கும் சம்பளம் ரூ.10000 முதல் ரூ.15000 வரை அதிகபட்சமாக இருக்கக் கூடும் அவர்கள் பணிபுரியும் வேலை நேரம் காலை 8.40 முதல் மாலை 6.00 வரையாகும், ஆனால் 2015 ம் ஆண்டு பணியில் சேர்ந்த ஒரு ஆசிரியருக்கு ரூ.27850.00 சம்பளம் கொடுக்கப்படுகிறது (அவர்களது வேலை நேரம் அனைவருக்கும் தெரிந்ததே). இது மொத்த ஆசிரியர்களுக்கும் கணக்கிடும்போது கோடியை தாண்டக்கூடும்.
தனியார் பள்ளிகளில் 100 % தேர்ச்சி தரும்போது போதுமான ஆசிரியர்கள் இருந்தும் போதுமான சம்பளம் கொடுத்தும் அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவிகிதம் என் வருவதில்லை என இதை எதிர்த்து போர் தொடுக்கலாமே.
எங்களது ஈரோடு பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 2 மாணவர்கள் மட்டுமே உள்ளனர் அவர்களுக்கு ஒரு தலைமை ஆசிரியையும் ஒரு ஆசிரியையும் உள்ளனர் அவர் மாத சம்பளமே ரூ.50000 ஐ தாண்டும், இதையெல்லாம் மனதில் வைத்து நமது மக்கள் தனியார் பள்ளிக்கு எதிராக போர் கோடி தூக்குவதை விடுத்து, அரசு பள்ளிகளை மேம்படுத்தவும் அதன் கல்வி தரத்தை உயர்த்தவும் கோரிக்கை வைத்து போராடலாமே,

பதிவு : அமிர்தா
நாள் : 17-Jun-15, 12:00 am

பிரபலமான எண்ணங்கள்

மேலே