பூவிதழ் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : பூவிதழ் |
இடம் | : குளித்தலை |
பிறந்த தேதி | : 30-Dec-1980 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 19-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 1034 |
புள்ளி | : 516 |
என் உள்ளம் அழும்போதெல்லாம் ஆறுதலாய் கவிதை வடிக்கிறது என் பேனா !
என் காக்கை கூட்டில்
கவிதை முட்டையிட்ட
குயில் நீ !!
எந்தன் நாளை தொடங்கும்
ஒவ்வொரு குவளை தேநீருக்கும்
உந்தன் சாயல் கண்மணி !!
பெருங்கடலையே அசைத்துக்கொண்டிருக்கும்
சிறு மீனின் துடுப்பு போல
என் வாழ்வின் நொடிகளை நகர்த்திக்கொண்டிருக்கிறது
உன் நினைவுகள் !!
கொரோனாவோடு சேர்த்து
என்னையும்
கை கழுவிவிட்டனர்
மக்கள் (மதியர்கள் )
மழை தந்த வானுக்கும்
மேகம் தந்த கடலுக்கும்
குளிர் கற்று தந்த மலைக்கும்
மலை தந்த மரத்துக்கும்
மரம் நட்ட நல்ல மனிதனுக்கும்
பயிர் நட்டு களை பறித்து
நீர் பாய்ச்சி கதிர் அறுத்த கைகளுக்கு
உரம் தந்து உழவுக்கும் உணவுக்கும்
உழைத்திட்ட எருதுகளுக்கு
உலகுக்கு ஓளிதந்து
பயிருக்கு உயிர் தந்த பகலவனுக்கு
மண்ணாய் மரமாய்
நதியாய் கடலாய்
மலையாய் வான் மழையாய்
நம்மை வாழவைக்கும் இயற்கைக்கும்
நன்றி! நன்றி ! நன்றி !
சகியே !
பகலிலும்
படுக்கைவிரிக்கிறது
உன்கனவுகள்
தூக்கத்தை துரத்திவிட்டு
துயிலாட்டுகிறது நம்
காதல்குழந்தையை !
எங்கள் வாழ்வில் இனியதொரு தருணம்
உங்கள் வருகையோடும் வாழ்த்துகளோடும்
பூக்களோடு வரவேற்கிறோம்
புன்னகையோடு வாருங்கள்
உங்கள் வாழ்த்துமழையில்
வானவில் பூக்கட்டும்
வானிலும் எங்கள் வாழ்விலும்
வாழ்ந்துகாட்டுகிறோம்
வானும் மண்ணும் பயனுற !!
அழைப்பு இதழ்கள்
சகியே
உன்னுடன் பேச எத்தனிக்கும் பொழுதுகளையெல்லாம்
கையிருப்பு வைத்திருக்கும் காரணங்கள் தின்றுவிடுகிறது
மௌனம் மட்டுமே சமரசம் பேசிக்கொள்கிறது
முதுமையின்
பருவ வயது அது..!!
இரண்டு மனைவிகள்
தவறியிருந்தாலும்,
மூன்றாவது காலின்
முக்கிய துணை(வி)யுடன்
தவறாமல் இருப்பவர்..!!
ஒரு குரல் கேட்டு
ஓடி ஓடி வேலை செயதவர்கள்
அவர் முதுமையின் தொல்லையால்
எங்கோ ஓடிவிட்டனர்..!!
இப்போது அவரின்
காது கூட எதுவுமே கேட்பதில்லை..!!
நாட்டு நடப்புகளை
தினசரியில் தினசரி
மேயந்தவருக்கு,
நரை வந்து
நடை தளர்ந்து
நடப்பதற்கு முடியாத போது
செய்தி சொல்ல ஆளில்லை..!!
தரையில் எதையோ
தடவிக் கொண்டிருந்தார்..!!
கண்ணாடியால் பதித்த
அத்தனை பெரிய வீட்டில்
கீழே விழுந்த
மூக்கு கண்ணாடியை
எடுத்து தர ஆளில்லை..!!
பிள்ளை இல்லாத
வீடுதான் என்றாலும்
அக்கிழ
என்னவளே...
உன்னோடு நான் நடை போட்ட
மாலை நேர கதிரவன்...
பகலில் என் தனிமையில்
வரும் நிழலாய் உன் நினைவுகள்...
இரவில் உன்னோடு நான் கைபேசியில்
உரையாடிய நினைவுகள்...
இருளில் ஒளிரும் விண்மீனாய்
துணைக்கு வரும் உன் நினைவுகள்...
என் நெற்றியில் நீ பதித்த
முதல் முத்தம்...
நான் உறங்கினாலும்
உறங்கவில்லையடி...
உன் நினைவுகள் மட்டும்...
என்றோ நீ அனுப்பிய குரல்
பதிவு குறுந்தகவல்...
இன்றுவரை அதுதான்
என்னை எழுப்பும் இன்னிசை...
என் விழியின் ஓரம்
கலங்கினாலும்...
கலங்காமலும் கரையாமலும்
இருக்கிறது...
உன் நினைவுகள்
மட்டும் என்னில்...
நானே கரைந்துவிடும
வர்ணங்களுடன் வந்து அப்பிக்கொள்கிறது
அவளின் நினைவுகளும்
கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாய் !