கவிக்கண்ணன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : கவிக்கண்ணன் |
இடம் | : திருப்பூர் |
பிறந்த தேதி | : 30-Apr-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Dec-2014 |
பார்த்தவர்கள் | : 369 |
புள்ளி | : 54 |
பெரும் பேறு பெற்றதனால்
பெண்ணாக பிறந்தீரே !
கற்காலம் முதற் தோன்றி
கலிகாலம் கண்டீரே !.
உடன்கட்டை காலத்தில்
உடல்கருகி துடித்தீரே !
சதைப்பிண்டம் போல்வாழ்ந்து
சிதையுற்று செத்தீரே !
முலைக்கச்சை சட்டத்தில்
மானத்தை இழந்தீரே!
காமத்தின் சாபத்தில்
கலங்கித்தான் வாழ்ந்தீரே !.
படிப்பறிவை தடுத்ததனால்
பகுத்தறிவை தொலைத்தீரே !
அடுப்படியில் அன்றாடம்
அனல்சுட்டு வெந்தீரே !
பெண்ணடிமை காலத்தில்
பிழையாக கிடந்தீரே !
ஆண்டவனே ! ஆணென்று
அடங்கித்தான் போனீரே !.
பின்னாளில்.....
பொங்கித்தான் எழுந்தீரே
போர்களமும் புகுந்தீரே.
பேராற்றல்போல் பெண்டிர்
யுக யுகமாய் வளர்ந்தீரே!.
கலை
கண்ணே அமுதே !
கனிச்சுவையே தேனே .
கதியெனவே நின்றுனைக்
காதலிப்பேன் நானே !
பெண்ணே அழகே !
பெருமைமிகு சீரே .
பெருந்தெய்வம் பேசாதோ
பேரெழிலே நீயே !
விண்ணே மதியே !
வியன்பொருளே மானே !
விடிவெள்ளி நீயன்றோ
விந்தைகள் செய்வாய் .
பண்ணே தமிழே !
பசுமைகீதம் பாடு
பரவசமாய் நேசிப்பேன்
பார்த்துனை யன்றோ ?
Drawn in MS Paint .....
வண்ணமலர் மகரந்தம் களவாடி;
இராட்டைச் சுரங்கத்தில் சேமிக்கும்.
ஈக்களின் எச்சில். - தேன்!!!
என் மனமெனும் வானத்தில்
மதி உன்னை
மறைத்து வைத்தேன்.
மனமில்லையா உனக்கு?
வானம் கிழித்த
மின்னல் போல- என்
மனம் கிழித்தது ஏனோ?
மணப்பதற்கு மறைத்த உன்னை,
மதியில்லாமல் - என்
விதி முடித்தாய்
மாண்டு போன என்னுயிர்
மறுபடியும் முளைக்குமா?
மறு பிறப்பெடுத்தேனும் உன்னை
மணக்க போய்வருகிறேன் காதலியே!!!
அகம் புறம் ஓய்வெடுக்கும்
அகிலம் சுழல்வது அறியாது;
அண்டையர் எவரும் தெரியாது
அமைதி நிலையின் முன்னோடியாம்.
சுவாச சிரைகள் மட்டும்
சுருங்கி விரிந்து விளையாடும்
சுவாரஸ்யம் நிறைந்த இறப்பு!!!
என்று தணியும் நம் மக்களிடம் நிரம்பியுள்ள அறியாமை என்னும் பித்து...!?!?!?!
படித்ததில் பிடித்தது
சென்ற வாரம் நான் என்
சகோதரி வீட்டிற்கு சென்றிருந்தேன்.
அங்கு உணவருந்தி ஓய்வெடுத்த பின்
அவர்கள் நீண்ட நாட்களாக
ஒரு வீட்டுமனை வாங்க வேண்டும் எனக்
கூறி வந்ததை நினைவுபடுத்தினேன்.
எனக்குத் தெரிந்த ஒருவர் நல்ல இடத்தில்
ஒரு வீட்டுமனை இருப்பதாகவும்
விலையும் சற்று சகாயமாகவுள்ளதாக
வும் கூறினார்.
அதைப் போய்
இன்று பார்த்துவிட்டு வரலாம்
என்று கூறினேன்.
உடனே என் சகோதரி இன்று வேண்டாம்
அண்ணே என்றாள (...)
மனிதர்களால் என்னவெல்லாம் செய்ய முடியாது?
மருத்துவம் பார்ப்பேன்னு
மனசார நா சொன்னேன்
மனசையும், மண்குடிசையும் பார்த்து
தெகச்சு நின்ன என் ஆத்தா
உனக்காக சேர்ப்பேன்னு
வயலுக்கு நீ போன
முழு வைராக்கியதோட பாதி செருப்போட
கால்காசோட திரும்பி வந்த என் ஆத்தா
கால்காசும் காணலியே
சேத்தகாசும் நிலைக்கலியே
காசோட அப்பன் போன தெசபார்த்து
கலங்கி நின்ன என் ஆத்தா
தடம்மாறி போன அப்பன்
தடுமாறி வீடு வந்தான்
தட்டிவிட்டான் ஓட்ட பாத்திரத்த
மிஞ்சியத நீ திங்கையில என் ஆத்தா
ஓட்ட பாத்திரமும் ஒழுகுற குடிசையும்
வெச்சும் கணக்கு காணல
காணாதத கழுத்துல கண்டாங் கடங்காரன்
குறுகி நின்ன என் ஆத்தா
கஷ்டத்த நீ மாத்துன்னு
கெஞ்சி பாத்த கடவ
அன்பும் பண்பும் பாசமும் நிறைந்த எனதருமை நண்பர்களுக்கும், உறவுகளுக்கும் வாசகர்களுக்கும் கடந்த வருடத்தில் நிகழ்ந்த ஒரு அற்புத நிகழ்வை உங்களிடத்தில் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். பொது இடம் மற்றும் திருமண கச்சேரிகளில் பிரபல இசைகலைஞர்களுடன் பாடியும் தொகுத்தும் வழங்கியுள்ள நான் முதன்முதலாக கடந்த டிசம்பர் 2-ம் (02/12/2014) தேதி சென்னை, வடபழனி கமலா தியேட்டர்-ல் நடைபெற்ற “பெருமா கோவில் உண்டச் சோறு” இசைத்தட்டு வெளியீட்டுவிழாவில் விழாத் தொகுப்பாளராக கலந்துகொண்டேன். கடவுள் அருளிய பாக்கியம் எனக்கு கிடைத்ததுபோல் விழாவானது திரு. கல்யாணசுந்தரம் அய்யா அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. மற்றும் பிரபல இயக்குனர்
என் விழிப் பறித்துப்
புன்னகைக்கும் இளமொட்டுகள்
எந்தப் புகைவண்டியில்
தொற்றிக்கொண்டு
புவிக்கு வந்தனவோ
இந்த அதிகாலையில்
அழகழகாய்
இதழாடை உடுத்தியபடி !
இதழோடு இதழ் நெருங்கி
என்ன பேசும் இந்த மலர்ச்செடிகள்
அட!
பனித் துளிகளின்
பாதுகாப்பிற்கு
சூரியனிரண்டு கேட்கப்
போவதாய் பூக்களுக்குள்
புது மாநாடு !
வெள்ளை ரோஜாக்களை
விட்டுவிடலாம் ..
அமைதி வேண்டி
நிறம் வெளுத்த
அப்பாவிகள் அவை !
பீரங்கிச் சிறையில்
காஷ்மீரத்துச்
சிவப்பு ரோஜாக்களாம்!
ஒற்றை நிமிட
கவனக் குறைவினால்
தலை ஒடிந்த கதறல்
சின்னப் பூக்களிடமிருந்து !
கோரிக்கை முன்வைக்க
நேரமின்றி கொத்தாய்