ஜெகன் ரா தி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ஜெகன் ரா தி
இடம்:  மதுரை
பிறந்த தேதி :  20-Oct-1981
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Sep-2016
பார்த்தவர்கள்:  1971
புள்ளி:  228

என்னைப் பற்றி...

9994421121

என் படைப்புகள்
ஜெகன் ரா தி செய்திகள்
ஜெகன் ரா தி - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Jun-2022 11:42 am

கண்டனோடி முதல்
காதல் என்று அறியாமல்
காதல் கொண்டோம்

உறவென்ன
முறையென்ன
தேடவில்லை
தேவையுமில்லை

அழகாய் நம் உறவு
விதியால் பிரிவு

மீண்டும் வரமாய் வந்தாய்
வாழ்வென்ன நின்றாய்

தொடரும் நம் பந்தம்
நீ என்
தேவலோக சொந்தம்

மேலும்

ஜெகன் ரா தி - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jun-2022 11:58 am

காலங்கள் கடந்தும் கரையாத
உன் காதலால்

மேலும்

ஜெகன் ரா தி - எண்ணம் (public)
16-Aug-2019 5:58 pm

கர்ணனுக்கு மட்டும் ஏன் அதிக புகழ் அர்ஜுனனை விட?

அர்ஜுனன் ஒருநாள்.. கிருஷ்ணரிடம் கேட்டான்.....?

தருமரை விட கர்ணனையே பெரிய கொடையாளி என்று மக்கள் ஏன் கருதுகிறார்கள்?

இரண்டு பேருமே எதையும் இல்லை என்று சொல்லாமல் கொடுப்பவர்கள்தானே...?

கர்ணனுக்கு மட்டும் ஏன் அதிக புகழ் ?"

சரி, என்னுடன் வா, காட்டுகிறேன் என்று கூறி அர்ஜுனனை அழைத்துச் சென்றார் கிருஷ்ணன்.

இருவரும் பிராமணர்களைப் போல வேடமிட்டுக்கொண்டு தருமரின் அவைக்குச் சென்றார்கள்.

யாகம் நடத்த சந்தனக் கட்டைகள் வேண்டும் என்றார்கள்.

மன்னர் தருமர் உடனே சந்தன மரங்களை வெட்டிக் கொண்டு வருமாறு தன் ஆட்களை நாடு முழுவதும் அனுப்பினார்.

ஆனால் அப்போது மழைக்காலம்.

கொண்டு வந்த மரங்கள் எல்லாம் ஈரமாகி இருந்தன.

அவற்றைக்கொண்டு யாகம் நடத்த முடியாது.

இருவரும் கர்ணனிடம் சென்று அதே கோரிக்கையை வைத்தார்கள்.

கர்ணன் யோசித்தான்.

"அடாடா... இது மழைக்காலம்.

இந்த மழைக்காலத்தில் காய்ந்த கட்டைகள் கிடைக்காது. அதனால் என்ன... கொஞ்சம் பொறுங்கள்" என்றான்.

கோடரியை எடுத்து வந்தான்.

மாளிகையின் கதவுகளும் சன்னல்களும் சந்தன மரத்தால் செய்யப்பட்டவை.

கர்ணன் அவற்றை வெட்டி எடுத்துக் கொடுத்தான்.

இருவரும் திரும்பி வரும்போது கிருஷ்ணர் கேட்டார்.

"இப்போது புரிகிறதா அர்ஜுனா... தருமரிடம் கதவையும் ஜன்னல்களையும் உடைத்துத் தாருங்கள் என்று கேட்டிருந்தால் அவரும் உடனே தந்திருப்பார்தான்.

ஆனா அவர் தானாகவே அவ்வாறு சிந்திக்கவில்லை.

ஆனால் கர்ணன்...

நாம் கேட்கவே இல்லை. அவனாகவே யோசித்துச் செய்தான்.

யுதிஷ்டிரர் கொடுப்பது தர்மம் .......

கர்ணன் கொடுப்பது விருப்பம் ......

எந்த வேலையையும் விருப்பத்துடன் செய்தால் அது போற்றப்படும் செயலாகும்"...

இதிலிருந்து தெரிவது என்ன?

கடமைக்காகவோ, நிர்ப்பந்தமோ, தேவையோ, எதுவாக இருந்தாலும் செய்வதை விருப்பத்துடன் செய்யுங்கள். வெற்றி பெறுவீர்கள்

மேலும்

ஜெகன் ரா தி - எண்ணம் (public)
08-Aug-2019 11:35 pm

⏩ காத்திருக்கப் பழகு ... !!!

சுவாமி விவேகானந்தர் தனது உடல் எனும் சட்டையை களைந்த நாளில் 
தனது சேவையாளரிடம் கடைசியாக சொன்ன வார்த்தைகள்: 

"தியானம் செய்.!
நான் அழைக்கும் வரை காத்திரு.!!!"

நாம் வாழ்க்கையில் பல்வேறு கட்டங்களில் விரும்பிக் காத்திருக்க பழகினால் நிறைவு நமதாகும். 

பசிக்கும் வரை காத்திரு.

உடல் நீர் கேட்கும் வரை காத்திரு.

காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை காத்திரு.

சளி வெளியேறும் வரை காத்திரு.

உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு.

பயிர் விளையும் வரை காத்திரு.

உலையில் அரிசி வேகும் வரை காத்திரு.

கனி கனியும் வரை காத்திரு.

எதற்கும் காலம் கனியும் வரை காத்திரு.

செடி மரமாகும் வரை காத்திரு.

செக்கு எண்ணெய் பிரிக்கும் வரை காத்திரு.

தானியத்தின் உமி நீங்கும் வரை காத்திரு

தானியம் கல்லில் மாவாகும் வரை காத்திரு.

துவையல் அம்மியில் அரைபடும் வரை காத்திரு.

போக்குவரத்து சிக்கலில் இருந்து விடுபடும் வரை காத்திரு.

நண்பர்கள் பேசும் போது தாம் கூற வந்த கருத்துக்களை அவர்கள் கூறி முடிக்கும் வரை காத்திரு.

பிறர் கோபம் தணியும் வரை காத்திரு.

தேவையானவை உன் உழைப்பில் கிடைக்கும் வரை காத்திரு.

இது உன்னுடைய வாழ்க்கை...
ஒட்டப்பந்தயம் அல்ல.!

ஒடாதே

நில்

விழி

பார்

ரசி

சுவை

உணர்

பேசு

பழகு

விரும்பு

உன்னிடம் காத்திருப்பு பழக்கம் இல்லாததால்...

உன் வாழ்க்கைமுறைக்கு சற்றும் பொருந்தாத, தேவையில்லாத பொருட்களும், செய்திகளும் உன் மேல் திணிக்கப்படுகிறது.

உன் மரபணுவிற்கு சற்றும் சம்பந்தம் இல்லாத விஷ உணவுகள் உன் மேல் திணிக்கப்படுகிறது.

எதிலும் அவசரம் உன்னையும், உன் சந்ததியையும் அழிக்கும் ஆயுதம் என்பதை மறவாதே. 

உனது அன்பிற்கும் அக்கறைக்கும் எத்தனை உள்ளங்கள் காத்திருக்கின்றன என்பதை அறிவாயா.!

நீ இதற்கெல்லாம் காத்திருந்தால்
உன் உயிர் உன்னைவிட்டு பிரிய நீ விரும்பும்வரை காத்திருக்கும்.

காத்திருக்கப் பழகினால்........

வாழப் பழகுவாய்.!

இறை ஆற்றல் நீ உள்நோக்கி திரும்புவாய் என்று காத்திருப்பதை உணர்வாய்.

எல்லையற்ற அமைதி ஆற்றல் அபரிமிதம் உனக்காக காத்திருப்பதை  உணர்வாய்.!🙏

மேலும்

ஜெகன் ரா தி - Mariselvam அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Mar-2019 10:47 am

கூடலின் சொற்களை மருந்துக்கும்
எடுத்துக் கொள்ளாத நீ
ஊடலின் பொருட்டு நான் வீசி எறியும்
சொற்களை மட்டும் பொறுக்கி எடுத்து
வைத்துக் கொள்வதேனோ

அவை கனம் மிக்கவை
அவை சுடுபவை
அவை கூர்மையானவை
அவை பகடியானவை
அவை நரியைப் போன்றவை
அவை மொத்தத்தில் என்னைப் போன்றவை

ஏதோ சினத்தில் வீசியதை எல்லாம்
பொறுக்காதே
விட்டுவிடு சிறிது நேரத்தில் வந்து அவையே
என் கழுத்தை அறுக்கும்
நான் பார்த்துக் கொள்கிறேன்
புரிகிறதா உனக்கு

மேலும்

நன்றி 06-Mar-2019 7:26 pm
நன்றி 06-Mar-2019 7:24 pm
சூழ்நிலையை அழகாக உங்கள் கவிதையில் கூறியுள்ளீர்கள். 06-Mar-2019 7:11 pm
miga alagu 06-Mar-2019 5:37 pm
ஜெகன் ரா தி - ஜெகன் ரா தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Sep-2018 10:13 am

பார்க்க பரிதவித்த மனம்
பார்த்ததும் பதைபதைக்கும்

பாவை பார்வை பாய
பரவும் பரவசம்

பால்மேனி பார்த்திட
பல்லக்கு தோற்றிட

பல்லழகு பார்த்திட
பகலாகும் இரவும்

பாரினில் நீயே அழகு
பாவை நீயே உலகு

பாற்கடல் அன்பில்
பறிக்கொடுதேன் என்னை
பதில் கேட்டு காதலென
பரிசளிதேன் என்னை...!!!

மேலும்

நன்றி நட்பே......!!!! 26-Sep-2018 12:33 pm
அருமை 25-Sep-2018 6:41 pm
ஜெகன் ரா தி - ஜெகன் ரா தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Sep-2018 11:23 am

எனக்காய் ஒரு கவிதையென
ஏங்கி கேட்டாள்
ஏக்கம்தான் எனக்கும் கவிதை
கேட்ட கவிதையின்
ஏக்கம் தீர்க்க

உவமை சொல்ல
ஒன்றும் இல்லை
அவளுக்கு நிகராய்

வர்ணிக்க வார்த்தை
வையகத்தில் இல்லை

புது மொழி
புவியில் வேண்டும்
காதலி அவளை
கவிபாட

தவித்து
களைத்து
கண் மூட
தெரிந்தது
அவள் முகம்

தெரிந்த
சிறந்த
உயர்ந்த
கவிதை
இதுவென
அவள் புகை படம் அனுப்பினேன்

மேலும்

நன்றி நட்பே....!!!!! 24-Sep-2018 8:04 am
அழகு. 21-Sep-2018 11:44 pm
நன்றி நட்பே ......!!! 19-Sep-2018 9:01 am
வியந்து நின்ற கவிதை பொய்மையின் அழகு இதுவென்று உணர்த்த அவள் 17-Sep-2018 3:20 pm
ஜெகன் ரா தி - ஜெகன் ரா தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-May-2018 7:58 pm

ஒரு கிராமத்தில் ராமசாமி என்பவர் வாழ்ந்து வந்தார்..🏡🏡🏡

அவர் வீட்டுத் தோட்டத்தில் ஒரு முருங்கை மரம் இருந்தது.🌿🌿🌿🌿🌿

வாரம் ஒரு முறை முருங்கை காய்களை பறித்து, பையில் நிரப்பி தோளில் வைத்துக்கொண்டு ....

ஒன்பது கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் டவுன் வரை🚶🚶🚶🚶🚶
நடந்து சென்றே...

ரெகுலராக ஒரு மளிகை கடையில் விற்றுவிட்டு வருவது வழக்கம்▶▶▶▶▶

முருங்கை காயை கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக
அரிசி பருப்பு சர்க்கரை போன்ற வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவார்!🚹🚹🚹🚹

😀😀😀
ராமசாமி கொண்டுவரும் முருங்கைக்காயின் சுவை அந்த பகுதி மக்களிடையே மிகவும் பிரபலம்!😎😎😎

இதை பயன்படுத்தி மற்ற முருங்கைக்காயோடு

மேலும்

நன்றி நட்பே........ 12-Jun-2018 8:40 am
நன்றி நட்பே...... 12-Jun-2018 8:39 am
ஆஹா அற்புதம் .! கள்ளம் கபடமில்லாத கிராமத்து ராம சாமி உயர்ந்தே நிற்கிறார், பாராட்டுக்கள் 12-Jun-2018 8:12 am
ஆகா ஆகா..... என்ன ஒரு கதை.... சரியான சவுக்கடி ; நாம் ஒன்று நினைக்க தெய்வமொன்று நினைக்கும்....... 11-Jun-2018 1:40 pm
ஜெகன் ரா தி - ஜெகன் ரா தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Apr-2018 4:05 pm

என் இமைகளின்
இடையே இடைவெளி
உன் பார்வைக்கென

என் விரல்களின்
இடையே இடைவெளி
உன் விரல்களுக்கென

என் இதழ்களின்
இடையே இடைவெளி
உன் இதழ்களுக்கென

எனக்கும் உனக்கும்
இடையே இடைவெளி
இடைவெளி குறைத்து
இன்பத்தில் சேர்ந்திட

மேலும்

நண்பா நீங்கள் என்றும் எங்கள் ஊக்கமருந்து....!!!! நன்றி 23-Apr-2018 4:42 pm
செல்கள் எங்கும் ஆயுதம் ஏந்தும் சக்தி காதலுக்கு உண்டு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 23-Apr-2018 4:33 pm
ஜெகன் ரா தி - ஜெகன் ரா தி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
16-Jul-2017 2:19 pm

திருநீறு பூசுவதன் மகிமை!

புராண காலத்தில் ஒருநாள் துர்வாச முனிவர் தன் காலை வேளை அனுஷ்டானங்களை முடித்து, சிவனை தியானித்து நெற்றியில் திருநீறு அணிந்து பித்ரு லோகம் புறப்பட்டார். மாபெரும் தவசீலரை எதிரில் கண்ட வானவர்கள் மரியாதை நிமித்தம் அவரை வணங்கி நகர்ந்தனர். துர்வாசர் செல்லும் வழியில் பெரிய கிணறு ஒன்று தென்பட்டது.

இவ்வளவு பெரிய கிணறை நாம் பார்த்ததே இல்லையே என்கிற சிந்தனையுடன் அதனுள் ஒரு கணம் கண்களைச் சுருக்கி எட்டிப் பார்த்து விட்டு, மீண்டும் நடக்க ஆரம்பித்தார். அந்தப் பெரிய கிணற்றினுள் நரகத்தின் ஒரு பகுதி இயங்கிக் கொண்டிருந்தது. கடும் தீயும், அமில மழையும், பாம்பு - தேள் போன்ற கடும் விஷ ஜந்துக்களும் அங்கே ஆட்சி செலுத்திக் கொண்டிருந்தன.பூலோகத்தில் பாவம் செய்த பலரும் அங்கே வதை பட்டுக் கொண்டிருந்தார்கள். சொல்ல முடியாத துயரத்தை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள்.

துர்வாச முனிவர் குனிந்து அங்கே பார்த்துவிட்டு நகர்ந்த மறுகணமே திடீரென்று அங்கே நிலைமை தலைகீழாக மாறியது. அந்த நரகத்தில் அதிசயம் நடந்தது. பாம்புகளும் தேள்களும் மலர் மாலைகள் ஆயின. அமில மழையானது ஆனந்தம் தரும் நிஜ மழை ஆனது. சுட்டெரிக்கும் தீ, இதமான தென்றலாக அங்குள்ளோரை வருடியது. நரகம் முழுக்க சுகந்த நறுமணம் வீசியது. அங்கே இருந்த பாவ ஆத்மாக்கள் அனைவரும் ஆனந்தம் கொண்டனர். முகத்தில் பிரகாசம் வீசியது. இந்த நரகத்தைக் காவல் காத்துக் கொண்டிருந்த கிங்கரர்கள் பயந்துபோய் எமனிடம் ஓடினார்கள்.

திடீரென்று சொர்க்கமாக மாறிப் போன நரகம் பற்றிச் சொன்னார்கள். அதிர்ந்து போன எமனும் வந்து பார்த்து அதிசயி த்தான். தர்ம சாஸ்திர நெறிகள் ஒரு வேளை நமக்குத் தெரியாமல் மாற்றப் பட்டு விட்டனவா? அல்லல் பட வேண்டியவர்கள் ஆனந்தமாகத் திரிகிறார்ளே? என்று பதற்றத்துடன் இந்திரனிடம் ஓடினான். வந்து பார்த்த இந்திரனுக்கும் புரிய வில்லை. தேவாதி தேவர்கள் எவருக்கும் இதற்கான காரணம் புரியவில்லை. 

எனவே, எல்லோரும் சேர்ந்து கொண்டு சர்வேஸ்வரனிடம் போனார்கள். சிரித்தார் ஈசன். தன் நெற்றியைக் காட்டி, இந்தத் திருநீற்றை அகார, உகார, மகார (மோதிர விரல், நடுவிரல், ஆட்காட்டி விரல்) விரல்களால் எடுத்து நெற்றி நிறைய திரிபுரண்டர மாகவே (மூன்று கோடுகளாக) அணிய வேண்டும். இதுதான் முறை.

அகாரம் என்பது பிரம்மனையும், உகாரம் விஷ்ணுவையும், மகாரம் என்னையும் குறிக்கின்றன. எனவே சாஸ்திர நெறிப்படி திருநீறு அணிந்த தவசீலரான துர்வாசர் பித்ரு லோகக் கிணற்றைக் குனிந்து பார்க்கும்போது அவரது நெற்றியில் இருந்து ஒரு சிறு துளி திருநீறு உள்ளே விழுந்து விட்டது. அதனால்தான், சொர்க்கமாக மாறிப் போனது என்றாராம் சர்வேஸ்வரன். 

பார்த்தீர்களா திருநீற்றின் மகிமையை...! ஒரு சிறிதளவு திருநீறு, பாவம் செய்தவர்கள் மீது பட்டதால் புண்ணியம் செய்தவர்கள் ஆகிப் போனார்கள். ஆகவே நாளும் பூசுவோம் திருநீறு. போற்றி வணங்குவோம்  சிவபெருமானை.

சிவாய நம.

மேலும்

ஜெகன் ரா தி - அர்ஷத் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-May-2017 12:10 pm

என் ராணி

எனக்கெதிராக

போர் தொடுக்கிறாள்..

~சதுரங்கம் ...

மேலும்

நன்றி நண்பரே... 17-May-2017 11:14 am
இந்த குறுங்கவிதை என்னை நெகிழ்சியூட்டுகிறது... 17-May-2017 11:03 am
ஹாஹாஹா... உண்மை தான்.. 16-May-2017 9:45 pm
அழகு ... !! சதுரங்கத்தில் மட்டுமா போர் தோடுக்கின்றனர்??????? 16-May-2017 8:18 pm
ஜெகன் ரா தி - கார்த்திக் அளித்த ஓவியத்தை (public) பகிர்ந்துள்ளார்
14-Sep-2016 7:30 pm

பூவுக்குள் தேன் கண்டேன்.. ..
அந்த தேனுக்குள் சுவை கண்டேன் ...
அந்த சுவை பொருந்திய ...
என் தமிழ் பெண் உண்டென்பது இன்று அறிந்து கொண்டேன்.....

மேலும்

கவிதையின் இனிமை. ஓவியத்தின் எழில் மொத்தத்தில் திறமையின் ஊற்று 20-Jul-2018 4:48 pm
மிக அழகான ஓவியமும் கவியும் 19-Sep-2016 9:21 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (144)

LOKANATHAN

LOKANATHAN

COIMBATORE
user photo

Ganesan Nainar

Kundrathur
நன்னாடன்

நன்னாடன்

நன்னாடு, விழுப்புரம்
பாலா தமிழ் கடவுள்

பாலா தமிழ் கடவுள்

உங்களின் இதயத்தில்
இளவல்

இளவல்

மணப்பாடு

இவர் பின்தொடர்பவர்கள் (146)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (145)

உதயசகி

உதயசகி

யாழ்ப்பாணம்
மேலே