வினோத் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : வினோத் |
இடம் | : திருச்சி |
பிறந்த தேதி | : 24-Dec-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 26-Dec-2017 |
பார்த்தவர்கள் | : 255 |
புள்ளி | : 31 |
சங்கம் வளர்த்த மாநகரில் பிறந்து , மலைக்கோட்டை மாநகரில் வசிக்கிறேன் .
தமிழ் மொழி மீது ஆர்வம் மிகுதியால் கவிதை எழுத தொடங்கி உள்ளேன் .
வற்றிய நிலத்தடிநீரை
வளர்த்திடும் வித்தாக
வான்மழை
என் மனதில் கொண்ட வலி
சொல்லத்தெரியவில்லை
மனம் விட்டு சொல்ல வார்த்தையில்லை
நீ எங்கு தான் சென்று விட்டாய்
காணாமல் நான் கறைந்து போகிறேன்
காயத்தினை மட்டும் நீ விட்டு சென்றுவிட்டாய்
மறையாமால்வடுவாகின்னறதே
என்ன தான் செய்வேனோ
உள்ளுக்குள் அழுது
வெளியே மலர்ந்த முகம் காட்டி பொய்மையாய் வாழ்கிறேன்
ஏதோ ஒரு நம்பிக்கையில்
நீ வருவாய் என்று........
மனம் வலிக்கவே
நம்பிக்கை கொள்ளவே
ஏனோ தெரியவில்லை
ஒரு துளி ஈரம் மட்டும் நெஞ்சை நிறைக்க அது என்னவென்று காண நீ தந்த கைகுட்டை நான் அழுதால் துடைக்க நீ தந்தாய்
அதுவே என் நெஞ்சை நினைவுகளால் ஈரமாக்கவே
என் செய்வேனோ ?
குழலூதும் ஓசையாலே
குமரியவள் வந்தாளே
குழலுடைய மயக்கத்திலே
தனைமறந்து நின்றாளே
குமரனவன் தோள்களையே
குளிர்கரத்தால் தொட்டாளே
குழலதைத்தான் விட்டுவிட்டு
குலமகளைப் பற்றினானே
ஒரு எழுத்தாள(ன்)ர்
தன் இதயத்தில்
கருவாக சுமந்து வந்த
வார்த்தைகள் பிரசவமான பின்பு!
அதன் முழு தன்மையை
பார்க்க ஏங்கும் -- அந்த
தவிப்புகள்தான் கருத்துக்களோ???
பார்க்க பரிதவித்த மனம்
பார்த்ததும் பதைபதைக்கும்
பாவை பார்வை பாய
பரவும் பரவசம்
பால்மேனி பார்த்திட
பல்லக்கு தோற்றிட
பல்லழகு பார்த்திட
பகலாகும் இரவும்
பாரினில் நீயே அழகு
பாவை நீயே உலகு
பாற்கடல் அன்பில்
பறிக்கொடுதேன் என்னை
பதில் கேட்டு காதலென
பரிசளிதேன் என்னை...!!!
பார்க்க பரிதவித்த மனம்
பார்த்ததும் பதைபதைக்கும்
பாவை பார்வை பாய
பரவும் பரவசம்
பால்மேனி பார்த்திட
பல்லக்கு தோற்றிட
பல்லழகு பார்த்திட
பகலாகும் இரவும்
பாரினில் நீயே அழகு
பாவை நீயே உலகு
பாற்கடல் அன்பில்
பறிக்கொடுதேன் என்னை
பதில் கேட்டு காதலென
பரிசளிதேன் என்னை...!!!
தன்னிலையை உயர்த்த
தனக்கு தேவையானது
தன்னம்பிக்கை
பூனை குறுக்கே வந்ததால்
பயணத்தை நிறுத்தியது
எலி
ஒரு அந்திப்பொழுதிலே
ஆதவனின் வெளுச்சத்திலே
மரத்தின் கிளைகள் அசையும் ஓசையிலே
யாருமற்ற நிழற்குடையில்
காற்றைப்போல் அங்குமிங்கும்
உன் நினைவுகள் அலைபாய்கிறது ....
என்னையறியாமல் என் கண்கள்
கடிகாரத்தை நொடிக்கொருமுறை
சரியாகத்தான் செயல்படுகிறதா ?
என கவனித்துக்கொண்டே
இருக்கிறது ....
பேருந்து என்னை கடக்கும்போதெல்லாம்
உன் பாதம் தேடுகிறது என் கண்கள் ....
யாருமற்ற நிழற்குடை கூட
சிலரை அழைத்துக்கொண்டது ...
ஆனால்
எனக்கு மட்டும் சொந்தமான நீ
இன்னும் என்னை பார்க்காமல் இருப்பது எண்ணி
கோபமும் ஒருவித பதற்றமும்
என்னை கொன்றது ....
காற்று கொஞ்சம் வேகமாய் வீச
என் காதோர முடியை
தோற்றம் ஒன்றாயினும்
நோக்கம் தவறானவை
போலிகள்