தொலைதூரக் காதல்

ஒரு அந்திப்பொழுதிலே
ஆதவனின் வெளுச்சத்திலே
மரத்தின் கிளைகள் அசையும் ஓசையிலே
யாருமற்ற நிழற்குடையில்
காற்றைப்போல் அங்குமிங்கும்
உன் நினைவுகள் அலைபாய்கிறது ....

என்னையறியாமல் என் கண்கள்
கடிகாரத்தை நொடிக்கொருமுறை
சரியாகத்தான் செயல்படுகிறதா ?
என கவனித்துக்கொண்டே
இருக்கிறது ....

பேருந்து என்னை கடக்கும்போதெல்லாம்
உன் பாதம் தேடுகிறது என் கண்கள் ....

யாருமற்ற நிழற்குடை கூட
சிலரை அழைத்துக்கொண்டது ...
ஆனால்
எனக்கு மட்டும் சொந்தமான நீ
இன்னும் என்னை பார்க்காமல் இருப்பது எண்ணி
கோபமும் ஒருவித பதற்றமும்
என்னை கொன்றது ....

காற்று கொஞ்சம் வேகமாய் வீச
என் காதோர முடியை நானும் ஒதுக்க
என் பார்வையில் நீ விழுந்த
அந்த நொடியில் மீண்டும்
ஒருமுறை காதலில் நான் விழுந்தேன் ...

நீ என்னை நெருங்கி வர வர
உன்னை கட்டியணைத்திட
இதயம் ஏங்கியது
ஆனால் நானோ தட்டி அமைதிப்படுத்த செய்தேன் ....

அளவுகோல் வைத்து
அளக்க முடியாத அன்பு ...
அளக்கும் அளவுகோலில்
கண்களுக்கு தென்படாத அளவுக்கு
சிறு கோபம் ...
நீண்ட வருடங்களுக்கு பிறகு பார்த்த
கண்கள் கண்ணீர் கொண்டு உன்னை வரவேற்றது ...

இருவரின் கைகள் ஒன்றாய்
சேர்ந்து நன்கு பிடித்துக்கொண்டது ...
இருவரின் பாதங்களும் ஒருசேர
எடுத்து வைத்தது ...

மெதுவாக இருவரும் நடந்திட
நம் வீடு வந்தது ...
திறந்த கதவின் வழியே
அலையடித்து கரைசேரும்
கடல்நீர் போல்
நம் இரு குட்டி தேவதைகளும்
உன் இரு தோளோடு சாய்ந்து கொண்டனர் ...

என் இரு கைகள்
மூவரையும் அனைத்துக்கொண்ட
நொடியில் மகிழ்ச்சியின் பிடியில் நின்றேன் ...

மீண்டும் ஒரு நொடிக்காக
உன் நினைவுடன்
உன்னவள் ....

எழுதியவர் : deepikasukkiriappan (11-Sep-18, 10:51 pm)
பார்வை : 1337

மேலே