குலோத்துங்க சோழன் கோவை - நூல் - ஒன்பதாவது - பாங்கிமதியுடன்பாடு - இடைவினாதல் - பாடல் 90
அருணாசலக் கவிராயர் எழுதிய குலோத்துங்க சோழன் கோவை
நூல்.
அஃதாவது - மூன்றாநாள் தோழனாற்கூடுங் கூட்டம்; அது: சாரிதல் கேட்டல் சாற்றல் எதிர்மறை நேர்தல் கூடல் பாங்கிற் கூட்டலென ஏழுவகைப்படும்; அவ்வேழுந் தலைவன் பாங்கனைச் சார்தல் முதல் பாங்கிற் கூட்டலீறாகிய இருபத்துநான்கு விரிகளையுடையன; அவை வருமாறு:-
தலைவன் பாங்கனைச் சார்தல்.
பாங்கன் தலைவனை யுற்றது வினாவல்
தலைவ னுற்ற துரைத்தல்.
கற்றறி பாங்கன் கழறல்.
கிழவோன் கழற்றெதிர் மறுத்தல்.
பாங்கன் கிழவோற் பழித்தல்.
கிழவோன் வேட்கை தாங்கற்கருமை சாற்றல்.
(இ-ள்) தலைவன் பாங்கனைநோக்கி நீ பழிக்கின்ற என்னுள்ளந் தேறுதற்கு வேட்கை யென்னாற் றாங்கமுடியாதென்று கூறுதல்.
இதுவுமது.
பாங்கன் றன்மனத்தழுங்கல்.
ஒன்பதாவது - பாங்கிமதி யுடன்பாடு.
அஃதாவது--தலைவி வேறுபாட்டைப் புணர்ச்சியுண்மை யறிந்தாராய்ந்து தோழி தன்மதியை யுடன்படுத்தல்; அது: முன்னுறவுணர்தல், குறையுறவுணர்தல், இருவருமுளவழி யவன்வரவுணர்தலென மூன்றுவகைப்படும்;
அவற்றுள் - முன்னுறவுணர்தலாவது தலைவனைப் புணர்ந்து மீண்டுவந்து தன் முன்னுற்ற தலைவியின் வேறுபாட்டைப் பாங்கி கண்டு அதனானே கூட்ட முண்மையறிதல்;
அது: வகையின் வகையாய் ஐயமுற்றோர்தல், ஐயந்தீர்தல், பல்வேறு கவர்பொருட் சொல்லி நாடல் என மூன்றாம்;
அவற்றுள்- ஐயமுற்றோர்தல் பலவகைப்படும்;
குறையுறவுணர்தல்.
அஃதாவது-தலைவன் தழைமுதலியவற்றைக் கொண்டு தன்பாற் குறையுற்று நிற்பக்கண்டு பாங்கி அதனானே கூட்டமுண்டென்றறிதல்; அது: தேர்தல் தெளிதலென இருவகைப்படும். தேர்தல்-ஆராய்ச்சி செய்தல். அவைவருமாறு:-
பெட்டவாயில் பெற்றிரவு வலியுறுத்தல்.
ஊர்வினாதல்.
பேர்வினாதல்.
கெடுதிவினாவல்.
நெஞ்சு வினாதல்.
வழிவினாதல்
மொழியாமை வினாதல்.
இடைவினாதல்.
(இ-ள்) தழையைக் காட்டித் தலைவன் றன்கருத்தறிவித்து நுங் குழலும் முலையும் மதிபாரமா யிராநின்றன; இவையிவ்வாறு நிற்றல் எங்ஙனம்? நும் இடை யெங்கே? யென்று தலைவியைக் கேட்டல்.
கட்டளைக் கலித்துறை
தரும்போது கற்பக நேராங் குலோத்துங்கன் றஞ்சைவெற்பிற்
சுரும்போதி யீரொன்று கேட்கநின் றேன்சுனை சூழ்புனத்தைக்
கரும்போ தகங்கலை மேய்வதென் றேகடி தோட்டுதற்கு
வரும்போது கொண்டு வரமறந் தீர்கொன் மருங்கினையே (90)
ஊர்பெயர் கெடுதியோடொழிந்தவை வினாதல் முற்றிற்று.