அவள் அழகு

புற்றிலிருந்து வந்தெழுந்து படமெடுத்தாடும்

பொல்லா நாகமாயினும் என்னே எழில் அதன்

பின்னழகு அதில் கண்டேனே நானென்னவள்

மின்னல் கொடியிடை அழகும் இன்னும்

விரிந்த கார்க்கூந்தல் எழிலார்வண்ணமும்

பொலியும் பூரண நிலவின் ஒளியோ இவள்முகம்

துள்ளும் கயல்கள்தானோ இவள்கண்ணிரண்டும்

ஆடிவரும் சோலை மயிலாய் ஆடிவருகின்றாள் இவள்

சிறிய செவ்விதழ்கள் சற்றே திறக்க

கண்டேனே அதில்நான் ஒருபுன்சிரிப்பு

அன்றலர்ந்து விரிந்த முல்லைச்சரமாய்

மூடி திறக்கும் இமைகளால் இவள்

என்னை வா வா என்று அழைக்கின்றாளோ

கிட்டே வா வா வென்று

வாயடைத்து நிற்கின்றேன் நான் இங்கே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (15-Jan-25, 9:52 am)
Tanglish : aval alagu
பார்வை : 97

மேலே